புதிய இணைப்பு
மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலி வழமை நிலைக்கு திரும்பி உள்ளது
மெட்டாவுக்குச் சொந்தமான சமூக ஊடக நிறுவனமான வாட்ஸ்அப் சனிக்கிழமை மாலை 7.50 மணியளவில் உலகளவில் ஆயிரக்கணக்கான பயனர்களுக்கு செயலிழந்ததாக செயலிழப்பு கண்காணிப்பு வலைத்தளமான டவுன்டெக்டர் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை மாலை, செய்தி தளமான வாட்ஸ்அப்பின் சில பயனர்கள் பயன்பாட்டில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். நிலைகளைப் பதிவேற்றுவதிலும், செய்திகளை அனுப்புவதிலும் பலர் சவால்களை எதிர் கொண்ட நிலையில் இது தொடர்பில் புகாரளித்தனர்.

பயனர்கள் புகாரளித்த தகவல்களைச் சேகரிப்பதன் மூலம் செயலிழப்புகளைக் கண்காணிக்கும் சேவையான டவுன்டிடெக்டரின் தரவு, வாட்ஸ்அப் தொடர்பான குறைந்தது 597 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிக்கிறது.
குழுக்களில் கலந்துரையாடல் மற்றும் வேறு சில அம்சங்களும் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், மெட்டா நிறுவனம் இது தொடர்பில் உத்தியோகப் பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.