Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அன்னை பூபதியின் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வாகரையில் விளையாட்டு நிகழ்வுகள்

அன்னை பூபதியின் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வாகரையில் விளையாட்டு நிகழ்வுகள்

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

தியாக தீபம் அன்னை பூபதியின் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அதனை நினைவு கூறும் முகமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக நடைபெற்ற வருகிறது.

அதன் ஒரு நிகழ்வாக வாகரை பிரதேசத்தில் நேற்று முன்தினம் (15) நேற்று (16) ஆகிய இரண்டு நாட்கள்
கண்டலடி வாகரை பொது விளையாட்டு மைதானத்தில் மட்டக்களப்பு தாயக செயணியினரால் விளையாட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது அன்னையின் உருவப் படத்திற்கு மலர் வணக்கம், அக வணக்கம் செய்யப்பட்டும் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் யாவும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் மரதன் ஒட்டம், சைக்கிள் ஓட்டம்,கயிறு இழுத்தல், உதைபந்தாட்டம், பெண்களுக்கான எல்லை விளையாட்டு, என பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.

இவ் போட்டி நிகழ்சிகளில் இளைஞர் யுவதிகள் ஆர்வத்துடன் பங்குபற்றினார்கள்.

போட்டி நிகழ்சிகளில் பங்கு பற்றி வெற்றி பெற்ற விளையாட்டு அணிகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு பெறுமதி வாய்ந்த பரிசுப் பொருட்கள்,வெற்றிக் கேடயங்கள்,வெற்றிப் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு தாயகசெயலணி இணைப்பாளர் இ.செல்வகுமார்,வாகரை பிரதேச தாயக செயலணி ஒருங்கிணைப்பாளர் யு.புவனேஸ்வரன் மற்றும் அன்னை பூபதியின் பேரன் யோ.அரவிந்தன் ஆகியோர்கள் கலந்து கொணடனர்.

இதே வேளை எதிர்வரும் (19) அன்று அன்னை பூபதியின் நினைவு தினத்தை முன்னிட்டு அதனை நினைவு கூறும் முகமாக பல்வேறு நிகழ்வுகள் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அன்னை பூபதி 2 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அகிழ்சை வழியில் தமது போராட்டத்தினை; கடந்த 19.03.19 அன்று மட்டக்களப்பு மாமாங்க ஈஸ்வரர் ஆலயத்தில் குருந்தை மரத்தடியில் உண்ணா விரதத்தை ஆரம்பித்தார்.

தாம் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் அதே மாதம் 31 ஆம் திகதியன்று அவர் உயிர் நீத்தார்.

அதனை நினைவு கூறும் முகமாகவே தாயகச் செயலணியினால் இவ் நிகழ்வுகள் மாவட்டம் தோறும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு சித்தாண்டியில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் தப்பி ஓட்டம்
செய்திகள்

மட்டக்களப்பு சித்தாண்டியில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் தப்பி ஓட்டம்

September 25, 2026
கல்முனை கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான வரணியா-றியாசா முதலாம் தரத்திற்கு தரமுயர்வு
செய்திகள்

கல்முனை கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான வரணியா-றியாசா முதலாம் தரத்திற்கு தரமுயர்வு

September 24, 2026
நுவரெலியா, ஹட்டன் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை
செய்திகள்

நுவரெலியா, ஹட்டன் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

September 24, 2026
“நான் இலங்கையர் அல்ல, ஈழத் தமிழர்”; ஹாலிவுட் நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணனின் கருத்தால் கொதித்த சமூக வலைத்தள இனவாதிகள்!
சினிமா

“நான் இலங்கையர் அல்ல, ஈழத் தமிழர்”; ஹாலிவுட் நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணனின் கருத்தால் கொதித்த சமூக வலைத்தள இனவாதிகள்!

September 24, 2026
முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரை பயன்பாடு கணிசமாக அதிகரிப்பு!
செய்திகள்

முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரை பயன்பாடு கணிசமாக அதிகரிப்பு!

September 24, 2026
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு; கொத்மலை ஓயா அருகிலுள்ள மக்களுக்கு எச்சரிக்கை!
செய்திகள்

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு; கொத்மலை ஓயா அருகிலுள்ள மக்களுக்கு எச்சரிக்கை!

September 24, 2026
Next Post
முத்து பண்டாக்களும் முஸ்தபாக்களும் முத்துலிங்கத்திற்கு வாக்களிப்பதில்லை; சிறிநேசன் தெரிவிப்பு

முத்து பண்டாக்களும் முஸ்தபாக்களும் முத்துலிங்கத்திற்கு வாக்களிப்பதில்லை; சிறிநேசன் தெரிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு