Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நெல் விலையில் மீண்டும் பிரச்சினை ஏற்படாது; ஜனாதிபதி அநுர

நெல் விலையில் மீண்டும் பிரச்சினை ஏற்படாது; ஜனாதிபதி அநுர

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஒருபோதும் மீண்டும் நெல் விலை தொடர்பில் பிரச்சினை ஏற்படாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் இன்று (20) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு கருத்து வௌியிட்ட ஜனாதிபதி, நெல் களஞ்சியசாலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளதோடு, அதற்காக 500 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

நாங்கள் தயாராகிவிட்டோம். 3 இலட்சம் மெற்றிக் தொன் கொள்ளளவு கொண்ட களஞ்சியசாலைகளை புதுப்பித்துள்ளோம். நெல் கொள்வனவுக்கான வேலைத்திட்டங்களை மேற்கொண்டுள்ளோம், பாழடைந்து கிடந்த களஞ்சியசாலைகளை மறுசீரமைக்க நிதி ஒதுக்கினோம். முதலாவது நடவடிக்கையாக நெல் கொள்வனவுக்காக நெல் கொள்வனவு சபைக்கு 500 கோடி நிதி வழங்கினோம்.

சதொச மேலும் நெல் கொள்வனவுக்காக திட்டமொன்றை வகுத்தது. இதை விடக் குறைந்த விலையில் கொடுத்தாலும் பரவாயில்லை, இதை விட அதிக விலையில் கொடுத்தாலும் பரவாயில்லை, ஆனால் அதிக விலையில் அரசியை விற்பனை செய்ய முடியாது என நாங்கள் சொன்னோம். அதற்கு நாங்கள் கட்டுப்பாட்டு விலையை வழங்கியுள்ளோம். குறைந்த விலையிலான அனைத்து நெல்லையும் அரசாங்கம் விலைக்கு வாங்கும். விவசாயிகள் இனி தங்கள் நெல்லை விற்க முடியாது என்று முறைப்பாடு செய்யத் தேவையில்லை. விலைகளை நிலைப்படுத்த அரசாங்கம் தலையிடத் தயாராக உள்ளது.

நெல் விலை குறைந்தால் அதை வாங்குவோம். அதிகரித்தால் அவர்கள் வாங்குவார்கள். அரசாங்கத்துக்கு அவற்றை வாங்கி சேமித்து வைக்க வேண்டிய தேவை இல்லை. விவசாயிகளுக்கான நியாயமான விலையை வழங்குவதே எங்களது நோக்கம். அந்த திட்டம் வெற்றியளித்துள்ளது. இனி விவசாய உற்பத்திகளை அற்ப விலைக்கு விற்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!
செய்திகள்

மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!

September 19, 2026
திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!
செய்திகள்

திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!

September 19, 2026
கேகாலையில் ஹோட்டலுக்குள் துப்பாக்கிச் சூடு; இருவர் காயம்!
செய்திகள்

கேகாலையில் ஹோட்டலுக்குள் துப்பாக்கிச் சூடு; இருவர் காயம்!

September 19, 2026
பெசிலுக்கு எதிராக நீல அறிவித்தலை விடுக்குமாறு சர்வதேச பொலிஸாரிடம் CID கோரிக்கை!
செய்திகள்

பெசிலுக்கு எதிராக நீல அறிவித்தலை விடுக்குமாறு சர்வதேச பொலிஸாரிடம் CID கோரிக்கை!

September 19, 2026
மட்டக்களப்பு கல்லடியில் EMS தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு விழா!
செய்திகள்

மட்டக்களப்பு கல்லடியில் EMS தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு விழா!

September 19, 2026
வாகனப் பதிவு பிரச்சினைகள் – புதிய வட்ஸ்அப் முறைப்பாட்டு இலக்கம் அறிமுகம்
செய்திகள்

வாகனப் பதிவு பிரச்சினைகள் – புதிய வட்ஸ்அப் முறைப்பாட்டு இலக்கம் அறிமுகம்

September 19, 2026
Next Post
கொட்டாஞ்சேனையில் நாளை போக்குவரத்து கட்டுப்பாடு

கொட்டாஞ்சேனையில் நாளை போக்குவரத்து கட்டுப்பாடு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு