Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தேர்தல் ஆணைக்குழுவின் பக்கசார்பான செயற்பாடுகள் வருத்தத்திற்குரியது; ஜீவன் தொண்டமான்

தேர்தல் ஆணைக்குழுவின் பக்கசார்பான செயற்பாடுகள் வருத்தத்திற்குரியது; ஜீவன் தொண்டமான்

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தேர்தல்கள் ஆணைக்குழு சுயாதீனமாகவும், ஜனநாயக ரீதியாகவும் இயங்க வேண்டிய ஒரு அமைப்பு என்றும், இருந்தும் தேர்தல் ஆணைக்குழுவின் பக்கசார்பான இவ்வாறான செயற்பாடுகள் வருத்தத்திற்குரியது என பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடனான கலந்துரையாடல் இன்றைய தினம் (21) தேர்தல் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றிருந்தது.

இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கன்டவாறு தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இவ்வாறான கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதில் எந்த நன்மையும் இல்லையெனக் குறிப்பிட்டதுடன்,

வேட்புமனு தாக்கல் செய்தபோது சில சபைகளின் வேட்புமனுக்கல் நிராகரிக்கப்பட்டன. அச்சபைகளை நீதிமன்றத்தின் மூலம் மீள பெற்றுள்ளோம், சில சபைகள் தொடர்பாக தேர்தல் ஆணையாளரிடம் முறையிட்டுள்ளோம்.

அத்தோடு மஸ்கெலியா உள்ளூராட்சி மன்ற சபை ஏன் நிராகரிக்கப்பட்டது என்று தேர்தல் ஆணையாளரிடம் வினவியபோதும், அங்கீகரிக்கப்பட்ட நபர் வேட்புமனு தாக்கல் செய்யாமல் வேறு நபர் தாக்கல் செய்யப்பட்டமையினால் நிராகரிக்கபட்டது என தெரிவிக்கப்பட்டது.

இவ்விடயம் தொடர்பாக எங்களுடைய கட்சியிலே வேட்புமனு அங்கீகரிக்கப்பட்ட நபருக்கு சுகயீனம் கராணமாக அவரின் மருத்துவ சான்றிதல் சமர்பித்து அவருக்கு பதிலாக நியமித்திருந்த மாற்று நபருக்கு சமாதான நீதவானின் சான்றிதல் வழங்கியிருந்தும் எங்களுடைய கட்சியின் மஸ்கெலியா பிரதேச சபையின் வேட்புமனுவினை நிராகரித்து இருந்தனர்.

இது தொடர்பாக தேர்தல்கள் ஆணையாளரிடம் வினவியபோது அவர் அதற்கு எவ்வித பதிலும் வழங்கவில்லை.

மேலும் ஜனாதிபதி அனுரகுமார திசாநயக்க அவர்கள் தேர்தல் பிரசாரங்களின் போது உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றிபெரும் எங்களுடைய (தே.ம.ச) கட்சியை சார்ந்த உறுப்பினர்களுக்கே நிதி ஓதுக்கீடு மேற்கொள்வேன் என்றும் மாற்று கட்சி உறுப்பினர்கள் தொடர்பாக யோசிப்போம் என்றும் கூறிவருகின்றார். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

இதேவேளை ஜனாதிபதி அண்மையில் தெரிவித்த கருத்து தொடர்பிலும் தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தார். அத்தோடு நாட்டின் ஜனாதிபதி என்பதை மறந்து எதிர்க்கட்சி தலைவர் என்று நினைத்து தேர்தல் மேடைகளில் பேசிவருகின்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி (நீக்குதல்) சட்டமாக அமுலுக்கு வருகிறது!
செய்திகள்

பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி (நீக்குதல்) சட்டமாக அமுலுக்கு வருகிறது!

September 23, 2026
செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை நாமல் மீண்டும் விளக்கமறியலில்
செய்திகள்

செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை நாமல் மீண்டும் விளக்கமறியலில்

September 23, 2026
கொக்குத்தொடுவாய் சட்டவிரோத உப்பளத்தை நிறுத்த தீர்மானம்!
செய்திகள்

கொக்குத்தொடுவாய் சட்டவிரோத உப்பளத்தை நிறுத்த தீர்மானம்!

September 23, 2026
வரி வருவாயை வலுப்படுத்த புதிய இடைக்கால மூலோபாயம் அவசியம்; IMF
செய்திகள்

வரி வருவாயை வலுப்படுத்த புதிய இடைக்கால மூலோபாயம் அவசியம்; IMF

September 23, 2026
ஜனாதிபதியால் மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்!
செய்திகள்

ஜனாதிபதியால் மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்!

September 23, 2026
திட்டமிட்டு பழிவாங்குகிறார்கள் – மனித உரிமைகள் ஆணைக்குழுவை நாடிய ஆசிரியர்!
செய்திகள்

திட்டமிட்டு பழிவாங்குகிறார்கள் – மனித உரிமைகள் ஆணைக்குழுவை நாடிய ஆசிரியர்!

September 23, 2026
Next Post
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நீதிபதி

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நீதிபதி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.