Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சர்ச்சைக்குரிய ஒலிப்பதிவு விவகாரம் : தில்ருக்ஷி டயஸ் விடுதலை!

சர்ச்சைக்குரிய ஒலிப்பதிவு விவகாரம் : தில்ருக்ஷி டயஸ் விடுதலை!

3 years ago
in செய்திகள்

சர்ச்சைக்குரிய ஒலிப்பதிவு தொடர்பில் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்கவை விடுதலை செய்ய பொதுச்சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

மொறட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் அரசாங்க பரிசோதகர் திணைக்களம் ஆகியவற்றினால் முன்னர் வழங்கப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்கவிற்கும் அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதியிற்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் ஒலிப்பதிவு திருத்தப்பட்டுள்ளதாக விசாரணை அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டில், தொடர்புடைய ஒலி நாடா சமூக ஊடகங்களில் பரவியபோது, ​​​​சம்பவத்தை விசாரிக்கத் தொடங்கிய பொதுச் சேவை ஆணைக்குழு, அந்த ஆண்டு செப்டம்பர் 24 அன்று தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்கவை பணியிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்தது.

எனினும் 2021ஆம் ஆண்டு மொரட்டுவ பல்கலைக்கழகமும் அரசாங்க பரிசோதகர் திணைக்களமும் இணைந்து நடத்திய நீண்ட விசாரணையின் போது தொலைபேசி உரையாடல் முழுவதையும் சிதைத்து ஒலிநாடா தயாரிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் அன்றைய அரசியல் அரங்கில் பரபரப்பாக பேசப்பட்ட சம்பவமாக இருந்தது, தில்ருக்ஷி டயஸ் விக்கிரமசிங்க தன்னுடன் இணைந்து செய்த ஒலிப்பதிவு முழுவதையும் பகிரங்கப்படுத்துமாறு எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.

குறித்த சம்பவம் இடம்பெற்ற போது அவர் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக கடமையாற்றியிருந்தார்.

தில்ருக்ஷி டயஸ் விக்கிரமசிங்க தற்போது ஓய்வுபெற்றுள்ள நிலையில், பொதுச் சேவை ஆணைக்குழுவின் இந்த முடிவின் மூலம் எதிர்காலத்தில் நிலுவை சம்பளம் மற்றும் சலுகைகளுக்கு அவர் உரித்துடையவராவார்.

தொடர்புடையசெய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
Next Post
கிழக்கு மாகாண இளைஞர் யுவதிகளுக்கு அவுஸ்ரேலியா சிட்னி ஒலிம்பிக் பார்க் பயிற்றுனரின் விசேட நீச்சல் பயிற்சி!

கிழக்கு மாகாண இளைஞர் யுவதிகளுக்கு அவுஸ்ரேலியா சிட்னி ஒலிம்பிக் பார்க் பயிற்றுனரின் விசேட நீச்சல் பயிற்சி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு