சிவனொளிபாதமலை யாத்திரை மேற்கொண்டிருந்த பெண் ஒருவர் வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
அக்குரெஸ்ஸ, பிரதேசத்தை சேர்ந்த 43 வயதான சுனிதா குமாரி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண் 2 பிள்ளைகளின் தாய் ஆவார். குறித்த பெண் தனது சொந்த ஊரான ஊருபோக்காவை சேர்ந்த உறவினர்கள் குழுவுடன் ஒரு யாத்திரையை ஏற்பாடு செய்து, இந்த மூன்று நாள் யாத்திரையில் இணைந்துள்ளார்.

பயணத்தின் இரண்டாவது நாளான மே மாதம் 4 ஆம் திகதி, நல்லதன்னி பகுதியில் உள்ள ஓடையில் வழுக்கி விழுந்து சுனிதா உயிரிழந்துள்ளார்.
திடீரென தனது மகளை காணவில்லை என தேடிய சுனிதா தனது கணவரிடம் மயக்கம் ஏற்படுவதாக கூறியதாகவும் மகளை தேடி பார்க்குமாறும் கூறியுள்ளார்.
கணவர் மகளை தேடி சென்ற போது சுனிதா வழுக்கி விழுந்துள்ளார். காயமடைந்த பெண்ணை பொலிஸார் மஸ்கெலிய பிராந்திய மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் சிக்கிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.