மியன்மார் சைபர் குற்ற முகாம்களில் இருந்து மீட்கப்பட்ட 15 இலங்கையர்கள் நேற்று (07) காலை நாடு திரும்பியுள்ளனர்.
இந்த 15 இலங்கையர்களும் தாய்லாந்தின் பேங்கொக் நகரத்திலிருந்து நேற்று காலை 10.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சும் தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரகமும் தாய்லாந்து அரசாங்கத்துடன் ஒருங்கிணைந்து மேற்கொண்ட முயற்சியின் விளைவாக இந்த 15 இலங்கையர்களும் கடந்த (06) மியன்மார் சைபர் குற்ற முகாம்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
மியன்மார் சைபர் குற்ற முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்களில் 14 பேர் கடந்த மார்ச் 18 ஆம் திகதியும், 27 பேர் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 17 திகதியும் நாட்டு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.