Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஏறாவூரில் அதிகளவு அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு 10 ஆயிரம் அபராதம்

ஏறாவூரில் அதிகளவு அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு 10 ஆயிரம் அபராதம்

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

ஏறாவூரில் கடை ஒன்றில் விற்பனைக்கு வைக்கப்பட்ட உப்பினை பொது சுகாதர பரிசோதகர்கள் கைப்பற்றி பகுப்பாய்வுக்கு அனுப்பியதில் அதிகளவான அயடீன் கலந்துள்ளது கண்டுபிடித்ததையடுத்து கடை உரிமையாரை 10 ஆயிரம் ரூபா அபராதம் செலுத்துமாறு இன்று (26) ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டு வைற் சோல்ட் இலச்சனையிடப்பட்ட பொதி செய்யப்பட்ட உப்பை நாடு மழுவதும் தடை செய்ததுடன், இதனை கைப்பற்றி அழிக்குமாறும் தாயாரிக்கும் இடத்தை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்களுக்கு கட்டளை பிறப்பித்துள்ளார்.

கடந்த மாதம் ஏறாவூர் பிரதேசத்தில் கடை ஒன்றில் விற்பனைக்கு வைக்கப்பட்ட பொதி செய்யப்பட்ட வைற் சோல்ட் என்ற இலச்சனை பதித்த உப்பு பையை ( பக்கெட்) சித்தாண்டி பொது சுகாதார பரிசோதகர் எஸ்.சிவகாந்தன் கைப்பற்றி அதனை பகுப்பாய்வு திணைக்களத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பிவைத்தார்.

இந்த நிலையில் ஒரு கிலோ உப்பில் 30 கிராம் அயடீன் இருக்க வேண்டும் ஆனால் குறித்த உப்பில் 84 கிராம் அயடீன் கலந்துள்ளதாகவும் இது மனித பாவனைக்கு உகந்தது அல்ல என பகுப்பாய்வு திணைக்களம் அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து குறித்த உப்பை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்ததையடுத்து இன்று நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்து கொண்ட போது குறித்த உப்பு பையில் பொறிக்கப்பட்ட உற்பத்தி செய்யும் இடம் மற்றும் ஏனைய இரத தரவுகள் போலியானது எனவும் ஏறாவூரில் சட்ட விரோதமாக பொதி செய்யப்பட்டு பல பெயர்கள் கொண்ட இலச்சனையுடன் விற்பனை செய்யப்படுவதாக நீதிமன்றிற்கு பொது சுகாதார பரிசோதகர் சுட்டிக்காட்டினார்.

இதனையடுத்து நீதவான் குறித்த கடை உரிமையாளரை 10 ஆயிரம் ரூபா அபராதமாக செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டு வைற் சோல்ட் பெயர் பொறிக்கப்பட்டு பொதி செய்யப்பட்ட உப்பு பையை ( பக்கெட்) நாடு முழுவதும் தடை செய்ததுடன் அதனை கண்டுபிடித்து அழிக்குமாறும் குறித்த உப்பு தயாரிக்கப்படும் இடத்தை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்களுக்கு நீதவான் கட்டளை பிறப்பித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து மாமாங்கேஸ்வரர் கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது
காணொளிகள்

வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து மாமாங்கேஸ்வரர் கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது

August 2, 2026
மூதூரில் கோர விபத்தில் பல்கலை மாணவன் மற்றும் பிரான்ஸ் செல்லவிருந்த இளைஞன் பலி
செய்திகள்

மூதூரில் கோர விபத்தில் பல்கலை மாணவன் மற்றும் பிரான்ஸ் செல்லவிருந்த இளைஞன் பலி

August 2, 2026
தரமற்ற தலைக்கவசங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்தால் சட்டநடவடிக்கை
செய்திகள்

தரமற்ற தலைக்கவசங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்தால் சட்டநடவடிக்கை

August 2, 2026
16 ஆண்டுகளுக்குப் பிறகு பேராதனையில் பூத்த உலகின் மிகப்பெரிய ஓர்க்கிட் மலர்
செய்திகள்

16 ஆண்டுகளுக்குப் பிறகு பேராதனையில் பூத்த உலகின் மிகப்பெரிய ஓர்க்கிட் மலர்

August 2, 2026
மட்டக்களப்பில் “கூரிய பார்வை, சிறந்த கற்றல்” திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு
செய்திகள்

மட்டக்களப்பில் “கூரிய பார்வை, சிறந்த கற்றல்” திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு

August 2, 2026
அஸ்வெசும கொடுப்பனவில் மோசடி செய்த இரு பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியலில்
செய்திகள்

அஸ்வெசும கொடுப்பனவில் மோசடி செய்த இரு பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியலில்

August 2, 2026
Next Post
மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை தாக்கிய பொலிஸ் அதிகாரி பணியிலிருந்து இடைநீக்கம்

மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை தாக்கிய பொலிஸ் அதிகாரி பணியிலிருந்து இடைநீக்கம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு