Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இரத்தப் பரிசோதனைக்கு அதிக கட்டணம் அறவிட்ட தனியார் நிறுவனத்திற்கு ரூ.30 இலட்சம் அபராதம்!

இரத்தப் பரிசோதனைக்கு அதிக கட்டணம் அறவிட்ட தனியார் நிறுவனத்திற்கு ரூ.30 இலட்சம் அபராதம்!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தனியார் மருத்துவ ஆய்வுகூடமொன்று, முழுமையான இரத்தப் பரிசோதனை (Full Blood Count – FBC) ஒன்றிற்காக நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்சக் கட்டணத்தை மீறி ரூ.550 வசூலித்த சம்பவம் தொடர்பில், யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் அந்த நிறுவனத்திற்கு ரூ.30 இலட்சம் (3 மில்லியன் ரூபாய்) அபராதம் விதித்துள்ளது.

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது, யாழ்ப்பாணம், பலாலி வீதி, கந்தர்மடம் பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவ ஆய்வுகூடம், FBC பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட ரூ.400-ஐ விட ரூ.150 அதிகமாக அறவிட்டது உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து, குறித்த நிறுவனத்திற்கு எதிராக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. விசாரணையின்போது, நிறுவனம் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதையடுத்து, ரூ.30 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டதுடன், செய்த தவறை தனது சொந்தச் செலவில் பிரதான நாளிதழ்களில் அறிவிப்பாக வெளியிடவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து, தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ ஆய்வுகூடங்களில் சிகிச்சை அல்லது பரிசோதனைகளைப் பெறும் பொதுமக்கள், அரசு நிர்ணயித்துள்ள அதிகபட்சக் கட்டணங்களை அறிந்து செயல்படுமாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், எந்தவொரு சேவைக்கும் பணம் செலுத்தும் போது கட்டாயமாக ரசீது அல்லது பற்றுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அது எதிர்காலத்தில் முக்கிய ஆதாரமாக பயன்படும் என்றும் அதிகாரசபை வலியுறுத்தியுள்ளது.

அதிகபட்சக் கட்டணத்தை மீறி பணம் அறவிடப்பட்டால், அலுவலக நேரங்களில் 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் மூலம் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு பொதுமக்கள் முறைப்பாடு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்
செய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்

September 6, 2026
கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

September 6, 2026
Next Post
சவுதி எண்ணெய் கப்பல்கள் மீது ஹவுத்திகள் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்; செங்கடலில் பதற்றம் தீவிரம்!

சவுதி எண்ணெய் கப்பல்கள் மீது ஹவுத்திகள் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்; செங்கடலில் பதற்றம் தீவிரம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு