Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அர்னாப் சூறாவளி; மட்டக்களப்பு உள்ளிட்ட கிழக்கு மாகாண மக்கள் அச்சமடையத் தேவையில்லை!

அர்னாப் சூறாவளி; மட்டக்களப்பு உள்ளிட்ட கிழக்கு மாகாண மக்கள் அச்சமடையத் தேவையில்லை!

58 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அர்னாப் சூறாவளியின் தாக்கத்தினால் மட்டக்களப்பு உள்ளிட்ட கிழக்கு மாகாணங்களுக்கு நேரடியான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உருவாகியுள்ள அர்னாப் சூறாவளியினால் இலங்கைக்கு நேரடியான பாதிப்புகள் எதுவும் இல்லை என ஏற்கனவே பல தடவைகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும், இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை முன்னறிவிப்பிலும் இது தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை உள்ளிட்ட கிழக்கு மாகாண மக்கள் சூறாவளி தொடர்பில் தேவையற்ற அச்சமடைய வேண்டியதில்லை எனவும், இப்பகுதிகளில் சூறாவளியினால் பலத்த காற்றுத் தாக்கம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தினால் 2026 ஒக்டோபர் 26ஆம் திகதி வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பின்படி, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுகின்றது.

இதற்கமைய, வடக்கு, மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

எனினும், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் பாரிய மழைவீழ்ச்சி அல்லது சூறாவளித் தாக்கம் ஏற்படும் எனக் குறித்த முன்னறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் உத்தியோகபூர்வ வானிலை அறிவிப்புகளைப் பின்பற்றி, உறுதிப்படுத்தப்படாத தகவல்களால் பீதியடையாமல் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அனோஜன் சிவராசாவை சந்தித்த சவூதிக்கான இலங்கைத் தூதுவர்; சட்ட உதவிகளைத் தொடர உறுதி!
செய்திகள்

அனோஜன் சிவராசாவை சந்தித்த சவூதிக்கான இலங்கைத் தூதுவர்; சட்ட உதவிகளைத் தொடர உறுதி!

October 27, 2026
‘அர்னாப்’ புயல் தீவிரமடைந்தது; இலங்கையின் பல பகுதிகளுக்கு கனமழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை!
செய்திகள்

‘அர்னாப்’ புயல் தீவிரமடைந்தது; இலங்கையின் பல பகுதிகளுக்கு கனமழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை!

October 27, 2026
பொலிஸ் தடுப்பில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு; ஹோமாகம பொலிஸார் மூவர் பணி இடைநீக்கம்!
செய்திகள்

பொலிஸ் தடுப்பில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு; ஹோமாகம பொலிஸார் மூவர் பணி இடைநீக்கம்!

October 26, 2026
நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை; க.பொ.த சாதாரண தர அழகியல் செய்முறைப் பரீட்சைகள் வழமைபோல் நடைபெறும்!
செய்திகள்

நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை; க.பொ.த சாதாரண தர அழகியல் செய்முறைப் பரீட்சைகள் வழமைபோல் நடைபெறும்!

October 26, 2026
மட்டு ஏறாவூர் தன்னாமுனையில் சோகம்; நீர் நிரம்பிய வாளிக்குள் விழுந்து 14 மாதக் குழந்தை உயிரிழப்பு!
செய்திகள்

மட்டு ஏறாவூர் தன்னாமுனையில் சோகம்; நீர் நிரம்பிய வாளிக்குள் விழுந்து 14 மாதக் குழந்தை உயிரிழப்பு!

October 26, 2026
அநுராதபுர புனித நகரில் ராமர், சீதையம்மன் கோவில்களைக் கட்டத் திட்டமா? – கம்மன்பில கேள்வி!
செய்திகள்

அநுராதபுர புனித நகரில் ராமர், சீதையம்மன் கோவில்களைக் கட்டத் திட்டமா? – கம்மன்பில கேள்வி!

October 26, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு