தமிழ்நாட்டின் சில பகுதிகளிலிருந்து இலங்கைக்குத் தொடர்ச்சியாகப் போதைப்பொருட்கள் கடத்தப்பட்டு வரும் நிலையில் அது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி, நாகை மாவட்டத்திலிருந்து இலங்கைக்குப் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாகத் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இந்த நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர் எனக்கூறப்படும் நபரிடம் முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகப் போதைப்பொருள் தடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டிலிருந்தே சந்தேக நபர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடந்த வருடம், குறித்த நபர் கஞ்சா போதைப்பொருளைக் கடத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








