இந்தியா உலகின் 4வது பெரிய மின்சார கார் உற்பத்தியாளராக மாற உள்ளதாக உலகப் பொருளாதார மற்றும் கொள்கை பிரச்சினைகள் குறித்து ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுகளை மேற்கொள்ளும் சுயாதீன சிந்தனைக் குழுவான ரோடியம் குழுமத்தின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் மின்சார கார்களுக்கான தேவை 1.1 முதல் 2.1 மில்லியன் யூனிட்கள் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மின்சார கார் உற்பத்தி திறன் பத்து மடங்கு அதிகரித்து 2.5 மில்லியன் யூனிட்களாக அதிகரிக்கும் என்றும் ஆய்வாளர் குழு தெரிவித்துள்ளது.
மின்சார கார்களை உற்பத்தி செய்வதில் உலகின் முன்னணி நாடாக சீனா உள்ளது, அதைத் தொடர்ந்து ஐரோப்பா மற்றும் அமெரிக்காவும் உள்ளன.
ஏற்றுமதி சந்தையில் நுழைவதற்கு செலவுகளைக் குறைப்பதன் மூலம் இந்தியா கடுமையாக போட்டியிட வேண்டியிருக்கும் என்று வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.








