Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் டெங்கு பரவலை கட்டுப்படுத்த உயர்மட்ட கலந்துரையாடல்

மட்டக்களப்பில் டெங்கு பரவலை கட்டுப்படுத்த உயர்மட்ட கலந்துரையாடல்

44 minutes ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று நேற்று (11) மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட பழைய செயலகத்தில் நடைபெற்றது.

டெங்கு நோய் அதிகளவில் பரவும் 14 மாவட்டங்களில் மட்டக்களப்பு மாவட்டமும் அடையாளம் காணப்பட்டு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது.

மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய டெங்கு தடுப்பு நடவடிக்கைகள், நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து அதிகாரிகள் கலந்துரையாடினர்.

வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருப்பதுடன், தேவையற்ற கழிவுகளை முறையாக அகற்றி, நீர் தேங்கக்கூடிய இடங்களை இல்லாதொழிக்க வேண்டும் என பொதுமக்களிடம் மாவட்ட அரசாங்க அதிபர் கோரிக்கை விடுத்தார்.

மேலும், டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதன் மூலம் நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும் என அவர் வலியுறுத்தினார்.

இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் என். சரவணபவன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர். முரளீஸ்வரன் உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags: BatticaloaNewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டு மாமாங்கேஸ்வரர் ஆலயத் தீர்த்தோற்சவத்தில் ‘மட்டு இளைஞர்களின்’ 13-வது வருட தாகசாந்திச் சேவை
செய்திகள்

மட்டு மாமாங்கேஸ்வரர் ஆலயத் தீர்த்தோற்சவத்தில் ‘மட்டு இளைஞர்களின்’ 13-வது வருட தாகசாந்திச் சேவை

August 12, 2026
ஈரானின் கொலை மிரட்டல் அச்சுறுத்தல்; இரகசியமாக விமானம் மாற்றிய ட்ரம்ப்
உலக செய்திகள்

ஈரானின் கொலை மிரட்டல் அச்சுறுத்தல்; இரகசியமாக விமானம் மாற்றிய ட்ரம்ப்

August 12, 2026
பாதாள உலக பிரமுகர் பெக்கோ சமனின் தாயார் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு!
செய்திகள்

பாதாள உலக பிரமுகர் பெக்கோ சமனின் தாயார் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு!

August 12, 2026
தனியார் பஸ் உரிமையாளர்களும் மெட்ரோ பஸ்களை இறக்குமதி செய்து சேவையில் ஈடுபடுத்த முடியும்
செய்திகள்

தனியார் பஸ் உரிமையாளர்களும் மெட்ரோ பஸ்களை இறக்குமதி செய்து சேவையில் ஈடுபடுத்த முடியும்

August 12, 2026
யாழ் சொகுசுப் பேருந்துகளுக்கு எதிராக விரைவில் எடுக்கவுள்ள நடவடிக்கை
செய்திகள்

யாழ் சொகுசுப் பேருந்துகளுக்கு எதிராக விரைவில் எடுக்கவுள்ள நடவடிக்கை

August 12, 2026
ஜனாதிபதி நிதிய நிதி ஒதுக்கீடுகள் கிடைக்காததால் 25,000க்கும் மேற்பட்ட இதய அறுவை சிகிச்சைகள் தாமதம்
செய்திகள்

ஜனாதிபதி நிதிய நிதி ஒதுக்கீடுகள் கிடைக்காததால் 25,000க்கும் மேற்பட்ட இதய அறுவை சிகிச்சைகள் தாமதம்

August 12, 2026
Next Post
மட்டு மாமாங்கேஸ்வரர் ஆலயத் தீர்த்தோற்சவத்தில் ‘மட்டு இளைஞர்களின்’ 13-வது வருட தாகசாந்திச் சேவை

மட்டு மாமாங்கேஸ்வரர் ஆலயத் தீர்த்தோற்சவத்தில் 'மட்டு இளைஞர்களின்' 13-வது வருட தாகசாந்திச் சேவை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு