கொலம்பியா மலை பிரதேசமான பெல்லோவில் பெய்துவரும் கனமழை காரணமாக அங்கு திடீர் மண்சரிவு ஏற்பட்டுள்ளது இதில் மலை மீது கட்டப்பட்டிருந்த குடியிருப்பு கட்டுமானங்கள் உள்ளிட்டவை அடித்து செல்லப்பட்டன.
இதுகுறித்து தகவலறிந்த பேரிடர் மீட்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களை மீட்கும் நடவடிக்கையில் அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த மண்சரிவில் சிக்கி 25 பேர் உயிரிழந்து உள்ளனர். மண்ணுக்குள் சிக்கி உயிரிழந்தவர்களில் 10 பேர் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டு உள்ளன.
மேலும் மண்ணுக்குள் புதைந்து மாயமானவர்களின் உடல்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இந்த மண்சரிவில் பலர் மாயமாகி உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.








