Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆளை கொல்ல வெளிநாட்டிலிருந்து பணம்; யாழில் 09 பேர் கைது!

ஆளை கொல்ல வெளிநாட்டிலிருந்து பணம்; யாழில் 09 பேர் கைது!

3 years ago
in செய்திகள்

பல்வேறு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 9 பேர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக கீரிமலை, கல்வியங்காடு பரமேஸ்வரா சந்தி, பாற்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் பெட்ரோல் குண்டுகளை வீசி வீடுகளை சேதப்படுத்திய பிரதான சந்தேக நபர் உட்பட 9 பேரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட பிரதான சந்தேக நபர் வெளிநாட்டில் உள்ள நிலையில் 6 பேர் குறித்த சம்பவத்துடன் நேரடியாக தொடர்புபட்டுள்ளதுடன் ஒருவர் தாக்குதல் சம்பவத்துக்கு மோட்டார் சைக்கிளை வழங்கியதுடன் ஒருவர் தரகராகவும் செயற்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட வன்முறை கும்பலிடம் இருந்து பெண்களின் ஆடைகள்,மோட்டார் சைக்கிள்கள்,வாள்கள்,கோடாரி,இரும்பு கம்பி,மடத்தல் போன்றன கைப்பற்றபட்டுள்ளன.

டென்மார்க்கில் வசித்துவரும் விஸ்வநாதன் என்ற நபர் பணம் அனுப்பியே குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது எனவும் அரச உத்தியோகத்தரையும் அவரது குடும்பத்தினரையும் கொலை செய்யும் நோக்கில் தாக்குதல் நடத்திய வன்முறை கும்பலுக்கு ஒரு லட்சத்து எண்பதாயிரம் ரூபா பணம் டென்மார்க்கில் இருந்து விஸ்வநாதன் என்பவரால் அனுப்பப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக செங்குந்தா இந்து கல்லூரி விளையாட்டு மைதானம் தொடர்பில் நீடித்த பிரச்சனையே குறித்த தாக்குதல் சம்பவத்துக்கு காரணம் எனவும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களை கொலை செய்ய முயற்சித்தமை என்ற குற்றச்சாட்டில் நாளையதினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக யாழ்ப்பாணம் விசேட குற்றத்தடுப்பு காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதேவேளை கல்வியங்காடு பிரதேசத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்சம்பவங்களின் சூத்திரதாரியாக காணப்படும் பிரதான சந்தேக நபரான டென்மார்க்கில் உள்ள விஸ்வநாதன் என்பவரை இன்டர்போல் உதவியுடன் கைது செய்யவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 15ஆம் திகதி கல்வியங்காடு பூதவராயர் வீதியில் உள்ள அரச உத்தியோகத்தர் ஒருவரது வீட்டின் மீது இரண்டு மோட்டார் சைக்கிள்களில் ஆயுதங்களுடன் வருகை தந்த 6 பேர் சேதம் விளைவித்திருந்தனர்.

இதன்போது மோட்டார் சைக்கிள், மாணவர்களின் புத்தகப்பை என்பன தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளதுடன், ஜன்னல் கண்ணாடிகளும் CCTV கெமராக்களும் சேதமாக்கப்பட்டிருந்ததுடன் குறித்த குழுவில் மூவர் பெண்களின் ஆடைகளை அணிந்து வந்திருந்ததாக காவல்துறையினர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து மாமாங்கேஸ்வரர் கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது
காணொளிகள்

வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து மாமாங்கேஸ்வரர் கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது

August 2, 2026
மூதூரில் கோர விபத்தில் பல்கலை மாணவன் மற்றும் பிரான்ஸ் செல்லவிருந்த இளைஞன் பலி
செய்திகள்

மூதூரில் கோர விபத்தில் பல்கலை மாணவன் மற்றும் பிரான்ஸ் செல்லவிருந்த இளைஞன் பலி

August 2, 2026
தரமற்ற தலைக்கவசங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்தால் சட்டநடவடிக்கை
செய்திகள்

தரமற்ற தலைக்கவசங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்தால் சட்டநடவடிக்கை

August 2, 2026
16 ஆண்டுகளுக்குப் பிறகு பேராதனையில் பூத்த உலகின் மிகப்பெரிய ஓர்க்கிட் மலர்
செய்திகள்

16 ஆண்டுகளுக்குப் பிறகு பேராதனையில் பூத்த உலகின் மிகப்பெரிய ஓர்க்கிட் மலர்

August 2, 2026
மட்டக்களப்பில் “கூரிய பார்வை, சிறந்த கற்றல்” திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு
செய்திகள்

மட்டக்களப்பில் “கூரிய பார்வை, சிறந்த கற்றல்” திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு

August 2, 2026
அஸ்வெசும கொடுப்பனவில் மோசடி செய்த இரு பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியலில்
செய்திகள்

அஸ்வெசும கொடுப்பனவில் மோசடி செய்த இரு பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியலில்

August 2, 2026
Next Post
இலங்கையிடமிருந்து கச்சதீவை மீட்பது உறுதி; தமிழக முதல்வர் திட்டவட்டம்!

இலங்கையிடமிருந்து கச்சதீவை மீட்பது உறுதி; தமிழக முதல்வர் திட்டவட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.