2025 வரவு செலவுத் திட்டத்தின் கீழ், அமைச்சரவை அனுமதியுடன் ஜூலை 1, முதல் நடைமுறைக்கு வரும் வகையில், ‘சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட வட்டி திட்டம் இன்று (02) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது, இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்காக உருவாக்கப்பட்ட திட்டமாகும்.
அவர்களின் நிலையான வைப்புகளுக்கு (Fixed Deposit) சந்தை வட்டி விகிதத்தைவிட கூடுதல் வருமானம் வழங்குவதை இதன் முக்கிய இலக்காகக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது.

மேலும், ஆண்டுக்கு 1 மில்லியன் ரூபாய் வரை FD வைத்திருக்கும் மூத்த குடிமக்கள் இந்த திட்டத்தின் பயனாளிகள் ஆவார்கள்.








