ஜேர்மனி கிழக்குப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால், அங்கு வசிக்கும் 100-க்கும் அதிகமான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஜேர்மனியின் கிழக்கு திசையில் அமைந்துள்ள, சாக்ஸோனி மற்றும் பிராண்டென்பர்க் ஆகிய மாநிலங்களுக்கு இடையிலான எல்லையில், கடந்த ஜூலை 1 ஆம் திகதி ஏற்பட்ட காட்டுத் தீயானது தொடர்ந்து பரவி வருவதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அந்தக் காட்டுத் தீயை அணைக்கும் பணியில், சுமார் 500-க்கும் மேற்பட்ட தீயணைப்புப் படை வீரர்கள் மூன்றாவது ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் உள்ளிட்ட 2 வீரர்களுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தக் காட்டுத் தீயானது, நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான நிலங்களை எரித்து நாசமாக்கியுள்ளது. இதையடுத்து, அப்பகுதியிலுள்ள தீப்பிழம்புகளைக் கண்டறியும் பணியில் சிறப்பு கமராக்கள் பொருத்திய ஹெலிகொப்டர்களின் உதவியுடன் அந்நாட்டு பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.








