பாலஸ்தீனத்தில் நடத்தப்படுகின்ற போர் குற்றங்கள் மற்றும் கொல்லப்படுகின்ற பொது மக்களுக்கு நீதியும் சுதந்திரமும் கிடைக்க வேண்டும் என்று பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவான கவனயீர்ப்பு போராட்ட பேரணி ஒன்று இன்று (04) மட்டக்களப்புமீராவோடையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மீராவோடை இளைஞர்களின் ஏற்பாட்டில் இவ் கவனயீர்ப்பு நடைபெற்றது.
வெள்ளிக் கிழமை ஜிம்மா தொழுகையின் பின் மீரா ஜும்மா பெரிய பள்ளிவாசல் முன்பாக ஒன்று கூடியவர்கள் பாலஸ்தீன மக்களுக்கு நீதி கோரி பதாதைகளை ஏந்தியவாறு இஸ்ரேலுக்கு எதிரான கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.















