Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பல்கலைக்கழக மாணவியின் முகநூலுக்கு நிர்வாண புகைப்படங்கள், காணொளிகளை பகிர்ந்து மிரட்டிய நபர் கைது

பல்கலைக்கழக மாணவியின் முகநூலுக்கு நிர்வாண புகைப்படங்கள், காணொளிகளை பகிர்ந்து மிரட்டிய நபர் கைது

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வயம்ப பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரின் முகநூல் கணக்கிற்கு மாணவியின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பகிர்ந்து மிரட்டியதாக கூறப்படும் இளைஞன் ஒருவர் வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று முன்தினம் (02) கைது செய்யப்பட்டுள்ளார்.

வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் குருணாகல் – மஹவ, பலல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் ஆவார்.

சந்தேக நபரான இளைஞன் போலி முகநூல் கணக்கு ஒன்றின் ஊடாக குறித்த பல்கலை மாணவியின் முகநூல் கணக்கிற்கு மாணவியின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பகிர்ந்து தான் கூறுவது போல் செய்யவில்லை என்றால் அதனை சமூக ஊடகங்களில் பகிர்வதாக கூறி மிரட்டியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பல்கலை மாணவி இது தொடர்பில் வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு முறைப்பாடு அளித்துள்ளார்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபர் குருணாகல் பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
Next Post
பாகிஸ்தான் வீட்டில் இருந்து தப்பி மக்களைத் தாக்கிய வளர்ப்பு சிங்கம்

பாகிஸ்தான் வீட்டில் இருந்து தப்பி மக்களைத் தாக்கிய வளர்ப்பு சிங்கம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு