இலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாக கருதப்படும் கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று(19)அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
கல்நந்தி புல்லுண்டு போர்த்துக்கீசரை உதைத்து கல்லாக்கிய அற்புத திருத்தலமாகவும், தானாக தோற்றம்பெற்ற ஆலயமாகவும், கிழக்கு மாகாணத்தின் தேரோடும் ஆலயம் என்னும் பெருமையினையும் கொண்டதாக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம் விளங்கி வருகின்றது.
அதேசமயம் இவ்ஆலயத்தின் தேரோட்டம் எதிர்வரும் செப்டெம்பர் 04ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.