Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இத்தாலியில் விமானத்தின் என்ஜினுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு நபரொருவர் உயிரிழப்பு

இத்தாலியில் விமானத்தின் என்ஜினுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு நபரொருவர் உயிரிழப்பு

1 year ago
in செய்திகள்

விமானத்தின் எஞ்சினுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு நபரொருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் இத்தாலியின் மிலன் பெர்கமோ விமான நிலையத்தில் கடந்த (8) இடம்பெற்றுள்ளது.

இத்தாலியின் மிலன் பெர்கமோ விமான நிலையத்தில் கடந்த (8) வோலோடியா நிறுவனத்தின் எயார்பஸ் ஏ-319 என்ற விமானம் ஸ்பெயினின் அஸ்டூரியாஸுக்கு செல்ல ஓடுதளத்தில் தயாராக இருந்தது.

ஓடுதளத்திலிருந்து விமானம் புறப்படும் வேளை விமானத்தின் அருகே சென்றுகொண்டிருந்த ஒருவர் திடீரென விமானத்தின் இயந்திரத்திற்குள் உள்ளிழுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். உயிரிழந்தவர் 35 வயதான பொதுமகன் என்று தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தையடுத்து ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், விமான நிலைய நடவடிக்கைகள் சில மணி நேரம் நிறுத்தப்பட்டன. மேலும் மிலன் பெர்கமோ விமான நிலையத்தின் அனைத்து செயல்பாடுகளும் இத்தாலியின் மிலன் மல்பென்சா (MXP) விமான நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.

இதற்கிடையே குறித்த விமானத்தில் சிக்கி உயிரிழந்தது பயணியோ விமான ஊழியரோ அல்ல. 154 பயணிகளும் 6 பணியாளர்களும் விமானத்தில் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்று வோலோடியா விமான நிறுவனம் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.

உலகத்தை உலுக்கிய அகமதாபாத் விமான விபத்திற்குப் பின்னர் தொடர்ச்சியாக பல நாடுகளில் விமான விபத்துக்களும் விமானங்கள் சார்ந்த பிரச்சினைகளும் அதிகளவில் இடம்பெற்று வருகின்றது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

September 6, 2026
முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை
செய்திகள்

முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை

September 6, 2026
போலி ‘Gov Pay’ இணையதளம் மூலம் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை
செய்திகள்

போலி ‘Gov Pay’ இணையதளம் மூலம் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை

September 6, 2026
அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி
அரசியல்

அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி

September 6, 2026
நாமல் இலஞ்சம் பெறவில்லை…அவருக்கு 8 இலட்சம் டொலர் பரிசாக வழங்கப்பட்டது; கம்மன்பில
செய்திகள்

நாமல் இலஞ்சம் பெறவில்லை…அவருக்கு 8 இலட்சம் டொலர் பரிசாக வழங்கப்பட்டது; கம்மன்பில

September 6, 2026
போதைப்பொருள் வியாபாரியிடம் பணம் , அவரது மனைவியிடம் பாலியல் இலஞ்சம் கோரிய கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் பணிநீக்கம்
செய்திகள்

போதைப்பொருள் வியாபாரியிடம் பணம் , அவரது மனைவியிடம் பாலியல் இலஞ்சம் கோரிய கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் பணிநீக்கம்

September 6, 2026
Next Post
வரலாற்று பாரம்பரியத்தில் வேரூன்றிய ஒரு தேசத்தை உருவாக்குவோம்; ஜனாதிபதி

வரலாற்று பாரம்பரியத்தில் வேரூன்றிய ஒரு தேசத்தை உருவாக்குவோம்; ஜனாதிபதி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு