Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொத்துவிலில் சட்டவிரோதமாக இயங்கும் இஸ்ரேலின் சபாத் இல்லத்தினை அகற்றுமாறு கோரிக்கை

பொத்துவிலில் சட்டவிரோதமாக இயங்கும் இஸ்ரேலின் சபாத் இல்லத்தினை அகற்றுமாறு கோரிக்கை

1 year ago
in செய்திகள்

பொத்துவில் – அறுகம்பே பிரதேசத்தில் முஸ்லிம்களின் மபாஸா பள்ளிவாயலுக்கு அருகில் அனுமதி இன்றி அமைக்கப்பட்டுள்ள இஸ்ரேலின் ‘சபாத் இல்லம்’ தொடர்பான பிரச்சினை, நேற்று (17) பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.ஆதம்பாவா தலைமையில் நடைபெற்ற பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முக்கிய விவாதமாக மாறியது.

இப்பிரேரணை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை அவர்களினால் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.

சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட இந்த ‘சபாத் இல்லம்’ எதிர்காலத்தில் சமூக இடைவெளி, மதச்சிக்கல்கள் மற்றும் பாதுகாப்பு பாதிப்புகளுக்கு வழிவகுக்கும்.

அத்துடன் பொத்துவில் பகுதியில் அனுமதி இன்றி அமைக்கப்பட்டுள்ள இஸ்ரேலின் ‘சபாத் இல்லம்’ தற்போது உயர் பாதுகாப்பு வலயமாக மாறி, மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பொத்துவில் மக்களின் தகவலின்படி, இந்த இடத்திற்கு பாதுகாப்பு பிரிவினரால் அதிகளவிலான பாதுகாப்பு வழங்கப்படுவதால், மாணவர் சமூகம், மீனவர் சமூகத்தினர், பிரதேசவாசிகள் மற்றும் ஏனைய நாட்டிலிருந்து வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அச்சத்தில் உள்ளனர். பொதுமக்கள் சுதந்திரமாக நடமாடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த ‘சபாத் இல்லம்’ சட்ட ரீதியாக பதிவு செய்யப்பட்டதா? என்பதை பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபைத் தவிசாளரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர்கள் பதிலளிக்கும்போது,


“இது இலங்கையின் கம்பனிச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், பொத்துவில் பிரதேசத்தில் அமைப்பதற்கான சட்ட அனுமதி எதுவும் பெறப்படவில்லை” என உறுதிபடுத்தப்பட்டது.

இது பிரதேச சபையின் விதிமுறைகளுக்கும், செயலகத்தின் அனுமதிகளுக்கும் முரணான செயல் என்பதுடன், சட்டத்திற்கு புறம்பானதாகவே பார்க்கப்பட வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன் போது, பொத்துவில் பிரதேசத்தில் அனுமதியில்லாமல் இயங்கிவருவதாக கூறப்படும் இஸ்ரேலின் நிறுவனம் தொடர்பாக மக்கள் பிரதிநிதிகள் பலரும் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். அப்துல் வாசித்,
“இந்த அமைப்பு பொத்துவில் மக்களை மட்டுமல்லாமல், இங்கு வருகை தரும் உல்லாசப் பயணிகளையும் அச்சத்திற்குள்ளாக்குகிறது. இதனால் அந்நியச் செலாவணியை அதிகரிக்கும் முயற்சிகள் பாதிக்கப்படும். எனவே, உடனடியாக இந்நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,” என்று தெரிவித்தார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளருமான எஸ். எம். எம். முஷாரப் கூறுகையில்,

“இது தொடர்பாக பிரதேச சபையில் எதுவிதமான அனுமதியும் பெறப்படவில்லை. இந் நிறுவனம் யார் மூலம், எப்படி இயங்குகிறது என்பதை உடனடியாக விசாரிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. மேலும், எமது பிரதேச பாடசாலை மாணவர்கள் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஈடுபட்ட காணொளிகளை, சில ஊடகங்கள் அதனை இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கையாக திருப்பி விளக்கி, இஸ்ரேலுக்கு எதிரான ஆர்ப்பாட்டமாக இதனை சித்தரித்து தமக்கான பாதுகாப்பை அதிகரிக்கச் செய்கின்றனர். இது மிகவும் கவலையளிக்கும் விஷயம்,” என்றார்.

பிரதேச சபையின் உப தவிசாளர் மாபிர் கூறுகையில்,

“இந்த அமைப்பு எமது பிரதேசத்தில், முஸ்லிம் பள்ளிவாசலுக்கருகில் சட்டப்படி அனுமதியின்றி இயங்குவது பல சந்தேகங்களை எழுப்புகிறது. இது திட்டமிட்ட செயலாக இருக்க வாய்ப்பு உள்ளது.

தற்போது இதற்காக வழங்கப்படும் அதிகப்படியான பாதுகாப்பு, மீனவர்கள், விவசாயிகள், மாணவர்கள் ஆகியோருக்கு அச்சத்தையும் தடையையும் ஏற்படுத்தியுள்ளது,” என்றார்.

இதேவேளை, முன்னாள் தவிசாளர் ரஹீம் கூறுகையில்,

“இந்த அமைப்பு உரிய பதிவு இல்லாமல், வெளிநாட்டில் இருந்து நேரடியாக கட்டுப்படுத்தப்படுகிறது என தகவல்கள் வெளியாகின்றன. பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்க்கின்றனர். இதனால் உள்ளூர் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. ஹோட்டல் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிறுவனத்தினை அகற்றுவதற்கான முடிவை தற்போது எடுக்க வேண்டும்,” என தெரிவித்தார்.

முன்னாள் பிரதித் தவிசாளர் ஏ. பி. பதுர்கான் கூறுகையில்,

“இந்நிறுவனம் மிகவும் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட அமைப்பாக இது தெரிகிறது. இது சாதாரண நிகழ்வல்ல. நமது நாட்டின் வருமானத்தையும் சுற்றுலா வளர்ச்சியையும் பாதிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது எனக் கூறினார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கறுப்பு ஜூலை வன்முறைகளுக்காகத் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோரிய சஜித்!
செய்திகள்

கறுப்பு ஜூலை வன்முறைகளுக்காகத் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோரிய சஜித்!

October 10, 2026
அனோஜன் தொடர்பில் தேவையற்ற கருத்தாடல்கள் வேண்டாம்; கல்முனை பொலிஸார் விசேட அறிவிப்பு!
செய்திகள்

அனோஜன் தொடர்பில் தேவையற்ற கருத்தாடல்கள் வேண்டாம்; கல்முனை பொலிஸார் விசேட அறிவிப்பு!

October 10, 2026
யாழ்ப்பாணத்தில் புதிதாக நான்கு மதுபானசாலைகளுக்கு அனுமதி; ஜனாதிபதியின் அவசரத் தலையீட்டைக் கோரும் ரஜீவன் எம்.பி!
செய்திகள்

யாழ்ப்பாணத்தில் புதிதாக நான்கு மதுபானசாலைகளுக்கு அனுமதி; ஜனாதிபதியின் அவசரத் தலையீட்டைக் கோரும் ரஜீவன் எம்.பி!

October 10, 2026
கச்சத்தீவு விவகாரத்தை வைத்து தமிழக அரசியல்வாதிகள் இனியும் மக்களை ஏமாற்ற முடியாது!
செய்திகள்

கச்சத்தீவு விவகாரத்தை வைத்து தமிழக அரசியல்வாதிகள் இனியும் மக்களை ஏமாற்ற முடியாது!

October 10, 2026
எரிபொருள் விலையைக் குறைக்க ரஷ்ய டீசல் இறக்குமதித் தடைகளைத் தற்காலிகமாகத் தளர்த்திய அமெரிக்கா!
செய்திகள்

எரிபொருள் விலையைக் குறைக்க ரஷ்ய டீசல் இறக்குமதித் தடைகளைத் தற்காலிகமாகத் தளர்த்திய அமெரிக்கா!

October 10, 2026
பனாமாவில் 7.7 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை!
செய்திகள்

பனாமாவில் 7.7 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை!

October 10, 2026
Next Post
இலங்கையில் இணையம் ஊடாக வங்கிக் கணக்கொன்றுக்குள் நுழைந்து பணத்தை கொள்ளையிட்ட மாணவன் கைது

இலங்கையில் இணையம் ஊடாக வங்கிக் கணக்கொன்றுக்குள் நுழைந்து பணத்தை கொள்ளையிட்ட மாணவன் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.