Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழ்ப்பாணத்தில் வாள்களுடன் ஐவர் கைது; கடத்தல் மற்றும் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை தீவிரம்

யாழ்ப்பாணத்தில் வாள்களுடன் ஐவர் கைது; கடத்தல் மற்றும் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை தீவிரம்

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கடத்தல் மற்றும் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில், இரு கூரிய வாள்களுடன் ஐவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் பயணித்ததாகக் கூறப்படும் கார் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அது யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல வர்த்தக நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமானதாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, கடந்த 5ஆம் திகதி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அருகே இளைஞர் ஒருவர் ஐவர் கொண்ட குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் அவரை கைதடி பகுதிக்கு அழைத்துச் சென்று தாக்கியதுடன், காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் பொஸ்கோ பாடசாலை அருகே விட்டுச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் கார் ஒன்றை வீதிச் சோதனையில் பொலிஸார் நிறுத்த முற்பட்டபோது, அது நிற்காமல் வேகமாகச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து பொலிஸார் வாகனத்தைத் துரத்திச் சென்று இடைமறித்து சோதனை மேற்கொண்டுள்ளனர்.

சோதனையின் போது காரிலிருந்து இரண்டு கூரிய வாள்கள் மீட்கப்பட்டதுடன், வாகனத்தின் கதவு மற்றும் ஆசனங்களில் இரத்தக் கறைகள் காணப்பட்டதாகவும், இரத்தக் கறை படிந்த சட்டை ஒன்றும் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சுமார் 2.5 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடத்தப்பட்டதாகக் கூறப்படும் இளைஞர் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க புதிய நடைமுறை!
செய்திகள்

கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க புதிய நடைமுறை!

August 24, 2026
தேசிய மக்கள் சக்தி உறுப்பினரின் மகன் போதைப்பொருள் விற்பனையின்போது கைது
செய்திகள்

தேசிய மக்கள் சக்தி உறுப்பினரின் மகன் போதைப்பொருள் விற்பனையின்போது கைது

August 24, 2026
பதுளை வைத்தியர் சடலமாக மீட்பு; தவறான முடிவு எடுத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம்!
செய்திகள்

பதுளை வைத்தியர் சடலமாக மீட்பு; தவறான முடிவு எடுத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம்!

August 24, 2026
தற்போதைய அரசின் கிரான் பாலம் மற்றும் வீதி புனரமைப்பு பணிகள் தரமற்றவை; புதிதாக நியமனம் பெற்ற மொட்டு அமைப்பாளர்
செய்திகள்

தற்போதைய அரசின் கிரான் பாலம் மற்றும் வீதி புனரமைப்பு பணிகள் தரமற்றவை; புதிதாக நியமனம் பெற்ற மொட்டு அமைப்பாளர்

August 24, 2026
மட்டக்களப்பில் இளைஞர்களுக்கான ‘Voice to Policy’ கலந்துரையாடல்; ஓகஸ்ட் 29ஆம் திகதி
செய்திகள்

மட்டக்களப்பில் இளைஞர்களுக்கான ‘Voice to Policy’ கலந்துரையாடல்; ஓகஸ்ட் 29ஆம் திகதி

August 24, 2026
பாரதீப் துறைமுகம் அருகே சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது; 22 பேர் மாயம்!
உலக செய்திகள்

பாரதீப் துறைமுகம் அருகே சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது; 22 பேர் மாயம்!

August 24, 2026
Next Post
மட்டு கல்லடி பாலத்தில் நபர் தற்கொலைக்கு முயற்சி; பொதுமக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து உயிர்காப்பு!

மட்டு கல்லடி பாலத்தில் நபர் தற்கொலைக்கு முயற்சி; பொதுமக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து உயிர்காப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு