மின்சார உற்பத்தியில் உள்நாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப்பை விரிவுபடுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடிய தெரிவித்துள்ளார்.
குருநாகல் ஹிரிபிட்டிய பகுதியில் அமைக்கப்பட்ட புதிய சூரிய மின் உற்பத்தி நிலையத்தை திறந்து வைக்கும் விழாவில் உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
20 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள இந்த நிலையம், 5 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின்சாரக் கட்டமைப்பில் இணைக்கும். இது, பேன் ஏசியன் பவர் நிறுவனத்தின் உப நிறுவனமான PAP MPHL Solar Pvt. Ltd. மூலம் நிறுவப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








