Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு கல்லாறு பாலத்தின் வடிச்சல் குழாய்கள் அடைப்பை சீர் செய்து விவசாயிகள் மக்களை வெள்ள அபாயத்தில் இருந்து காப்பாற்றுமாறு கோரிக்கை

மட்டு கல்லாறு பாலத்தின் வடிச்சல் குழாய்கள் அடைப்பை சீர் செய்து விவசாயிகள் மக்களை வெள்ள அபாயத்தில் இருந்து காப்பாற்றுமாறு கோரிக்கை

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு கோட்டை கல்லாறு பாலத்தின் வடிச்சல் குழாய்கள் மணலால் மற்றும் புற்களால் அடைபட்டுள்ளதால் மழை காலத்தில் வெள்ள நீர் கடலுக்குள் வழிந்தோட முடியாததையடுத்து மட்டக்களப்பு மற்றும் குடிமனைகள் வயல் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கி பாதிக்கபடவுள்ளது எனவே அடைபட்டுள்ள இந்த பாலத்தின் வடிச்சல் குழாய்களை சீர் செய்து விவசாயிகளையும் மக்களையும் இந்த அழிவில் இருந்து உரிய அதிகாரிகள் காப்பாற்றுமாறு மாவட்ட கமக்கார சங்கங்களின் சம்மேளன செயலாளர் நிரஞ்சன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அம்பாறை மாவட்திலுள்ள மழைவெள்ள நீர்கள், மற்றும் இங்கினியாகலை குளத்தின் மேலதிக நீர், மண்டூர், வெல்லாவெளி பிரதேசங்களில் இருந்து வரும் வெள்ள நீர் இந்த பாலத்தின் ஊடாக வடிந்து கடலுக்கு செல்லும்.

இவ்வாறான நிலையில் கடந்த 2004 சுனாமி அனர்த்தினால் முற்றாக பாதிக்கப்பட்டு இந்த பாலத்தை ஜப்பான் மக்களால் நன்கொடையாக வழங்கப்பட்டு நிதியினை கொண்டு இந்த பாலம் அமைக்கப்பட்டு பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில் குறித்த பாலத்தில் 20 க்கு மேற்பட்ட வடிச்சல் குழாய்கள் அமைக்கப்படடுள்ளது இதில் 10க்கு மேற்பட்ட வடிச்சல் குழாய்கள் மணல் மற்றும் புற்களால் முற்றாக அடைக்கப்பட்டுள்ளதால் இதனூடாக கடலுக்கு நீர்வடிந்தோட முடியாததையடுத்து வயல் நிலங்கள் மற்றும் மட்டக்களப்பு மற்றம் ஏனைய குடியிருப்புக்கள் வெள்ளத்தினால் மூழ்கி பாதிக்கப்படுகின்றது.

இதனால் விவசாயிகளுக்கு பல இலச்சம் நஷ்டம் ஏற்படுகின்றதுடன் மக்கள் துன்பங்களுக்கு முகம் கொடுத்துவருகின்றனர்.

பாலத்தின் வடிச்சல் பகுதி அடைக்கப்பட்டது தொடர்பாக சம்மந்தபட்ட அதிகாரிகளுக்கு கடந்த இரண்டு மூன்று வருடங்களாக தெரிவித்தபோதும் எவரும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கப்படவில்லை அதேவேளை இந்த பாலத்துக்கு பொறுப்பான திணைக்களம் இந்த பாலத்தை பராமரிக்காததால் ஆலைமரம் மற்றும் அரச மரம் பாலத்தில் வளர்ந்துவருவதால் பாலத்தில் வெடிப்பு ஏற்பட்டுவருகின்றது.

அதேவேளை இந்த பிரதான பாலத்தின் ஊடாக பல அரசியல்வாதிகள் அதிகாரிகள் உட்பட உரியதரப்பினர் பிரயாணம் செய்கின்றனர் அவர்களும் இதனை கவனிப்பதாக இல்லை.

எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கவனம் எடுத்து இங்குள்ள இயந்திரங்களை பாவித்து இதனை உரிய அதிகாரிகள் சீர் செய்து வரும் வெள்ள அனர்த்த அழிவில் இருந்து விவசாயிகளையும் மக்களையும் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மத்திய கிழக்கு பதற்றங்களை தணிப்பதற்கு இலங்கை மீண்டும் அழைப்பு
செய்திகள்

மத்திய கிழக்கு பதற்றங்களை தணிப்பதற்கு இலங்கை மீண்டும் அழைப்பு

September 29, 2026
உள்ளூராட்சி மன்றங்கள், பிரதேச செயலகங்களை டிஜிட்டல் மயமாக்க ஜனாதிபதி பணிப்பு
செய்திகள்

உள்ளூராட்சி மன்றங்கள், பிரதேச செயலகங்களை டிஜிட்டல் மயமாக்க ஜனாதிபதி பணிப்பு

September 29, 2026
சொகுசு வாகன முறைகேடு; முன்னாள் அமைச்சர் பௌசிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

சொகுசு வாகன முறைகேடு; முன்னாள் அமைச்சர் பௌசிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

September 29, 2026
மட்டக்களப்பு கொலைச் சம்பவம்; பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு ஒக்டோபர் 13 வரை விளக்கமறியல்!
செய்திகள்

மட்டக்களப்பு கொலைச் சம்பவம்; பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு ஒக்டோபர் 13 வரை விளக்கமறியல்!

September 29, 2026
நிந்தவூரில் 3 கிராமுக்கும் அதிகமான போதைப்பொருளுடன் 38 வயது நபர் கைது
செய்திகள்

நிந்தவூரில் 3 கிராமுக்கும் அதிகமான போதைப்பொருளுடன் 38 வயது நபர் கைது

September 29, 2026
உதய கம்மன்பில நிரபராதி என தீர்ப்பளித்தது நீதிமன்றம்
செய்திகள்

உதய கம்மன்பில நிரபராதி என தீர்ப்பளித்தது நீதிமன்றம்

September 29, 2026
Next Post
மத்திய மலைநாட்டில் பெய்த கனமழையால் மண்சரிவு

மத்திய மலைநாட்டில் பெய்த கனமழையால் மண்சரிவு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு