திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 52 வயதுடைய நபர் ஒருவரின் மிகப்பெரிய சிறுநீரகக் கல் சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டொக்டர் பிரகலாதன் பாலகிருஷ்ணன் தலைமையிலான வைத்தியர் குழுவினரால் இன்று (14) இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சத்திரசிகிச்சையின் போது 03 கிலோ 100 கிராம் எடையுடைய சிறுநீரகக் கல் அகற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டொக்டர் எம். எம். ரிஷ்லி, டொக்டர் ஜே. எம். இஹ்ஸான், டொக்டர் சீ. பிரகலாதன் உள்ளிட்ட வைத்தியர்களும், மயக்க மருந்து வைத்திய நிபுணர் டொக்டர் அமில ஜெயக்கடு உள்ளிட்ட குழுவினரும் சத்திரசிகிச்சையில் பங்கேற்றுள்ளனர்.









