யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வத்திராயன் முருகன் கோயில் அருகே, நேற்று (18) பிற்பகல் வீடு கட்ட அத்திவாரம் இடும் பணியின்போது மண்ணில் புதைந்திருந்த வெடிக்காத எறிகணை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டு, சம்பவம் குறித்து மருதங்கேணி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. பிற்பகல் 5 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அந்த எறிகணையை பாதுகாப்பாக மீட்டுச் சென்றுள்ளனர்.
கண்டெடுக்கப்பட்டது யுத்த காலத்தில் ஏவப்பட்ட எறிகணையாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.








