Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சுமார் 1 பில்லியன் டொலர் பணம் சட்டவிரோதமாக வெளிநாடு கடத்தல்; நான்கு வங்கி முகாமையாளர்கள் கைது!

சுமார் 1 பில்லியன் டொலர் பணம் சட்டவிரோதமாக வெளிநாடு கடத்தல்; நான்கு வங்கி முகாமையாளர்கள் கைது!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு அனுப்பியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், முன்னணி நான்கு தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதியியல் குற்ற விசாரணைப் பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நான்கு முகாமையாளர்களும் தாங்கள் பணியாற்றிய தனியார் வங்கிகளின் வளாகத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இவ்வாறானதொரு நடவடிக்கையில் வங்கி முகாமையாளர்கள் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணைகளில், குறித்த சட்டவிரோத பணப் பரிமாற்றத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பிரதான நபரிடமிருந்து இந்த வங்கி அதிகாரிகள் வாராந்தம் பணம் பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, சில அதிகாரிகளுக்கு வாராந்தம் 30,000 ரூபாய், 50,000 ரூபாய் மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் வரை பணம் வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட முகாமையாளர்களில் ஒருவருக்கு ஒரு சந்தர்ப்பத்தில் சுமார் 10 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாகவும் விசாரணைகளில் தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய பணப் பரிமாற்றங்கள் மற்றும் ஏனைய நபர்கள் தொடர்பிலும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதியியல் குற்ற விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பங்களாதேஷை வீழ்த்தி இலங்கை வெண்கலப் பதக்கம் வென்றது!
செய்திகள்

பங்களாதேஷை வீழ்த்தி இலங்கை வெண்கலப் பதக்கம் வென்றது!

October 3, 2026
ஆட்சியை கைப்பற்ற இனவாத சதிகள்; கோடீஸ்வரன் எச்சரிக்கை!
செய்திகள்

ஆட்சியை கைப்பற்ற இனவாத சதிகள்; கோடீஸ்வரன் எச்சரிக்கை!

October 3, 2026
பாம் எண்ணெய் இறக்குமதி தடையை நீக்க நடவடிக்கை?
செய்திகள்

பாம் எண்ணெய் இறக்குமதி தடையை நீக்க நடவடிக்கை?

October 3, 2026
எரிபொருள் பவுசர் கட்டண உயர்வு குறித்து CPC உடன் பேச்சுவார்த்தை; திங்கட்கிழமை இறுதி முடிவு!
செய்திகள்

எரிபொருள் பவுசர் கட்டண உயர்வு குறித்து CPC உடன் பேச்சுவார்த்தை; திங்கட்கிழமை இறுதி முடிவு!

October 3, 2026
சோள இறக்குமதி தாமதம்; கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை உயர்வு அபாயம்
செய்திகள்

சோள இறக்குமதி தாமதம்; கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை உயர்வு அபாயம்

October 3, 2026
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகன டயர்களுக்கு புதிய கட்டுப்பாடு
செய்திகள்

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகன டயர்களுக்கு புதிய கட்டுப்பாடு

October 2, 2026
Next Post
GovPay மூலம் போக்குவரத்து அபராதம் செலுத்தும் வசதி; சாரதிகளுக்கு பொலிஸார் முக்கிய அறிவிப்பு!

GovPay மூலம் போக்குவரத்து அபராதம் செலுத்தும் வசதி; சாரதிகளுக்கு பொலிஸார் முக்கிய அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு