நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை மற்றும் கொடிக்கயிறு வழங்கும் பாரம்பரியம் செங்குந்தர் பரம்பரையினரால் இன்றளவும் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் 24 முழம் நீளமான கொடிச்சீலையில் வேல், மயில் உருவங்கள் வரையப்பட்டு ஆலயத்திற்கு வழங்கப்படுவதுடன், அதே நீளத்தில் கொடிக்கயிறும் தயாரிக்கப்படுகிறது.
செங்குந்தர்களின் பாரம்பரியத் தொழிலாக நெசவுத் தொழில் காணப்பட்ட நிலையில், முன்னர் அவர்களே கொடிச்சீலையை நெய்து வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது புதிய துணியில் வேல், மயில் உருவங்கள் வரையப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த மரபு பல தலைமுறைகளாக தொடர்வதுடன், செங்குந்தர் சமூகத்தின் முருக பக்தி மற்றும் நல்லூர் ஆலயத்துடனான நீண்டகால வரலாற்றுத் தொடர்பை வெளிப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.












