Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜனாதிபதிகளுக்கு மட்டுமல்ல அனைத்து குடிமக்களுக்கும் பாதுகாப்பு வழங்குவது அரசின் கடமை; நளிந்த ஜயதிஸ்ஸ

ஜனாதிபதிகளுக்கு மட்டுமல்ல அனைத்து குடிமக்களுக்கும் பாதுகாப்பு வழங்குவது அரசின் கடமை; நளிந்த ஜயதிஸ்ஸ

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து விளக்கமளித்த அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் மற்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, “முன்னாள் ஜனாதிபதிகளுக்கு மட்டுமல்ல, அனைத்து குடிமக்களுக்கும் பாதுகாப்பு வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு” என தெரிவித்துள்ளார்.

இன்று (22) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அரசாங்கத்தால் உறுதிசெய்யப்படுமா? என்ற ஊடகவியலாளர் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

“நாங்கள் யாரையும் தனிப்பட்ட முறையில் இலக்காகக் கொண்டல்ல. உயிருடன் உள்ள முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைவர்கள் தொடர்பில் ஒரு பொது முடிவை எடுத்து இருக்கிறோம். இது குறித்து பாதுகாப்பு கவுன்சிலில் தொடர்ந்து கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன. புலனாய்வு மற்றும் பாதுகாப்பு தொடர்பான அறிக்கைகள் அடிப்படையில், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

மேலும், முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமைகளை வர்த்தமானி அறிவிப்பு மூலம் நிறைவு செய்யும் வகையில், தலைப்புச் சட்டம் திருத்தப்படவிருக்கிறது என்றும், அதற்கான ஒப்புதல் அமைச்சரவை மூலம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

சட்டத் திருத்தம் தொடர்பான ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கையில்,

“1986ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையிலான அரசாங்கம் கொண்டு வந்த சட்டமூலத்தில் ஓய்வு பெறும் ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பு, வீட்டு வசதி போன்றவை தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும். இன்று அவை தெளிவில்லாத நிலையில் இருப்பதால், அந்த சட்டத்தை ரத்து செய்து, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு, உரிமைகள், கட்டுப்பாடுகள் தொடர்பான புதிய சட்டமூலத்தை கொண்டுவர விரும்புகிறோம்,” என்றார்.

அத்துடன், முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவிடம் இதுபற்றி கேட்கப்படவில்லை என்றும், அவர் அந்த காலத்தில் பாதுகாப்புச் செயலாளராக இருந்ததை நினைவுபடுத்தியும் அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதேவேளை, பாதுகாப்பு தொடர்பான நீதிமன்றத் தீர்ப்புகளும், தற்போதைய முடிவுகளில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதாகவும் அவர் உறுதியளித்தார்.

இவ்வாறு, முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் பாதுகாப்பு வழங்குவதில் சமநிலை நிலவவேண்டும் என்ற அரசாங்கத்தின் நோக்கத்தை அமைச்சர் மீண்டும் வலியுறுத்தினார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
செய்திகள்

பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

September 20, 2026
அனோஜனை விடுதலை செய்யக் கோரி கல்முனையில் கவனயீர்ப்பு போராட்டம்!
செய்திகள்

அனோஜனை விடுதலை செய்யக் கோரி கல்முனையில் கவனயீர்ப்பு போராட்டம்!

September 20, 2026
நாவலப்பிட்டியில் மகாவலி கங்கை பெருக்கெடுப்பு; 100 குடும்பங்கள் இடம்பெயர்வு!
செய்திகள்

நாவலப்பிட்டியில் மகாவலி கங்கை பெருக்கெடுப்பு; 100 குடும்பங்கள் இடம்பெயர்வு!

September 20, 2026
அனோஜனுக்கு மன்னிப்புப் பெற்றுக்கொடுக்க இராஜதந்திர மட்டத்தில் உச்சபட்ச நடவடிக்கை; விஜித ஹேரத்!
செய்திகள்

அனோஜனுக்கு மன்னிப்புப் பெற்றுக்கொடுக்க இராஜதந்திர மட்டத்தில் உச்சபட்ச நடவடிக்கை; விஜித ஹேரத்!

September 20, 2026
தரமற்ற குழந்தை டயப்பர்கள் விற்பனை; நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரிக்கை!
செய்திகள்

தரமற்ற குழந்தை டயப்பர்கள் விற்பனை; நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரிக்கை!

September 20, 2026
இலங்கையில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகரிப்பு; மட்டக்களப்பில் குறைந்த பாலின விகிதம்!
செய்திகள்

இலங்கையில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகரிப்பு; மட்டக்களப்பில் குறைந்த பாலின விகிதம்!

September 20, 2026
Next Post
ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுக்கத் தவறிய கோட்டபய ராஜபக்ச தண்டிக்கப்பட வேண்டும்; கத்தோலிக்க திருச்சபை

ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுக்கத் தவறிய கோட்டபய ராஜபக்ச தண்டிக்கப்பட வேண்டும்; கத்தோலிக்க திருச்சபை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு