50 பேருடன் பயணித்த ரஷ்ய பயணிகள் விமானம் நாட்டின் கிழக்குப் பகுதியில் விபத்துக்குள்ளானது, முதற்கட்ட தரவுகளின்படி யாரும் உயிர் பிழைக்கவில்லை என்று அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
சைபீரியாவை தளமாகக் கொண்ட அங்காரா விமான நிறுவனத்தால் இயக்கப்படும் An-24 விமானம், சீனாவின் எல்லையை ஒட்டியுள்ள அமுர் பிராந்தியத்தில் உள்ள டின்டா என்ற நகரத்தை நெருங்கும் போது ரேடார் திரைகளில் இருந்து தவறி விழுந்ததாக அந்நாட்டு அவசரகால அமைச்சு இன்று (24) தெரிவித்துள்ளது.








