ஹிக்கடுவவில் இருந்து மருதானை நோக்கிச் சென்ற ரயிலொன்றில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக இன்று (28) மருதானை பாதையில் ரயில் சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த ரயிலை அகற்றி, பாதையை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.








