Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கல்முனை பிராந்தியத்தில் உணவகங்கள் மீது திடீர் சோதனை

கல்முனை பிராந்தியத்தில் உணவகங்கள் மீது திடீர் சோதனை

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பொதுமக்களுக்கு சுகாதாரம் மற்றும் பாதுகாப்புமிக்க உணவுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் கல்முனை பிராந்தியத்திலுள்ள உணவகங்கள், உணவு கையாளும் நிறுனங்களை சோதனைக்குட்படுத்தும் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதற்கமைவாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் கடந்த 28 ஆம் திகதியில் இருந்து தொடர்ச்சியாக கல்முனை மற்றும் இறக்காமம் பிரதேசங்களில் உள்ள ஹோட்டல்கள் உள்ளிட்ட உணவு கையாளும் நிறுவனங்கள் திடீர் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

பிராந்திய மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம்.லபீர், உணவு மருந்துகள் பரிசோதகர் எஸ்.ஜீவராஜா உள்ளிட்ட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து குறித்த சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

சுகாதார விதிமுறைகளை மீறிய உணவக உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற, பழுதடைந்த உணவுப் பொருட்களும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன. பாவிக்க முடியாத, சேதமடைந்த உணவு தாயாரிக்கும் பாத்திரங்களும் இதன்போது கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பொதுமக்களின் நலன்கருதி பிராந்தியத்தில் உள்ள உணவகங்கள், உணவு கையாளும் நிறுவனங்கள் சோதனைக்குட்படுத்தும் வேலைத்திட்டம் பிராந்திய பனிப்பாளரின் உத்தரவிற்கமைவாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இந்தியாவின் என்விஎஸ்-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது!
உலக செய்திகள்

இந்தியாவின் என்விஎஸ்-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது!

October 31, 2026
பிற்பகலுக்கு பின்னர் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
செய்திகள்

பிற்பகலுக்கு பின்னர் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

October 31, 2026
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்!
செய்திகள்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்!

October 30, 2026
பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன் தமிழர் தரப்பு சந்திப்பு!
செய்திகள்

பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன் தமிழர் தரப்பு சந்திப்பு!

October 30, 2026
மட்டக்களப்பில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 21 வருட கடூழிய சிறைத்தண்டனை!
செய்திகள்

மட்டக்களப்பில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 21 வருட கடூழிய சிறைத்தண்டனை!

October 30, 2026
இலங்கையின் மின்சார உற்பத்தியில் மாற்றம் அவசியம்; டீசல் மின் உற்பத்தியை நிறுத்துமாறு சஜித் வலியுறுத்தல்!
செய்திகள்

இலங்கையின் மின்சார உற்பத்தியில் மாற்றம் அவசியம்; டீசல் மின் உற்பத்தியை நிறுத்துமாறு சஜித் வலியுறுத்தல்!

October 30, 2026
Next Post
இலங்கை சிறுவர்களிடையே விட்டமின் டி குறைபாடு

இலங்கை சிறுவர்களிடையே விட்டமின் டி குறைபாடு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு