Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தை இராணுவத்தின் மீது சுமத்த முயற்சி; சரத் வீரசேகர

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தை இராணுவத்தின் மீது சுமத்த முயற்சி; சரத் வீரசேகர

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடர் எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள நிலையில் இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்கும் நாடுகளை திருப்திப்படுத்துவதற்காகவா முப்படைகளின் முன்னாள் அதிகாரிகள் கைது செய்யப்படுகிறார்கள் என்ற சந்தேகம் காணப்படுகிறது. செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தை இராணுவத்தின் மீது சுமத்துவதற்கு ஒருதரப்பினர் முயற்சிக்கிறார்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் குறிப்பிடுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

முப்படைகளின் அதிகாரிகள் மற்றும் முப்படையினர் சட்டத்துக்கு விரோதமான முறையில் செயற்பட்டிருந்தால் அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது.

இராணுவத்தின் உயர் அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்படும்போது அவர்களை சிறைச்சாலையில் ஏனைய கைதிகளுடன் ஒன்றாக அடைக்காமல், வீட்டுக்காவலில் வைக்க முடியும். ஆனால் கைது செய்யப்பட்ட கடற்படையின் முன்னாள் தளபதி ஏனைய கைதிகளுடன் ஒன்றாக சிறைக்கூண்டில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடத்தி காணாமலாக்கப்பட்ட விவகாரத்தில் தான் கடற்படையின் முன்னாள் தளபதி சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடர் எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள நிலையில் இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்கும் நாடுகளை திருப்திப்படுத்துவதற்காகவா முப்படைகளின் முன்னாள் அதிகாரிகள் கைது செய்யப்படுகிறார்கள் என்ற சந்தேகம் காணப்படுகிறது.

செம்மணி மனித புதைகுழி விவகாரத்தை இராணுவத்தின் மீது சுமத்துவதற்கு ஒருதரப்பினர் முயற்சிக்கிறார்கள். விடுதலை புலிகள் அமைப்பினர் சித்திரவதை முகாம்களை நடத்தினர். விடுதலை புலிகள் அமைப்பில் இணைவதற்கு இணக்கம் தெரிவிக்காத தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அவ்வாறு கொல்லப்பட்டவர்களின் உடல்கள் செம்மணி பகுதியில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டு நகர் புறத்திலுள்ள பூச்சட்டிகளை சேதப்படுத்தும் நபர்கள்
காணொளிகள்

மட்டு நகர் புறத்திலுள்ள பூச்சட்டிகளை சேதப்படுத்தும் நபர்கள்

September 17, 2026
500 ரூபாய் இலஞ்சம் பெற்ற நீதிமன்ற அலுவலக ஊழியர் கைது!
செய்திகள்

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற நீதிமன்ற அலுவலக ஊழியர் கைது!

September 17, 2026
நவீன சுகாதார சேவையை வலுப்படுத்த மூன்று முக்கிய துறைகளில் கவனம்; ஜனாதிபதி!
செய்திகள்

நவீன சுகாதார சேவையை வலுப்படுத்த மூன்று முக்கிய துறைகளில் கவனம்; ஜனாதிபதி!

September 17, 2026
மட்டக்குளியில் இடம் பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டக்குளியில் இடம் பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு!

September 17, 2026
பொலிஸ் நற்சான்றிதழ் விண்ணப்ப சிக்கல்களுக்கு 24 மணி நேர தொலைபேசி சேவை!
செய்திகள்

பொலிஸ் நற்சான்றிதழ் விண்ணப்ப சிக்கல்களுக்கு 24 மணி நேர தொலைபேசி சேவை!

September 17, 2026
மட்டு வெல்லாவெளியில் டிப்பர் – முச்சக்கர வண்டி மோதி விபத்து; பெண் உயிரிழப்பு
செய்திகள்

மட்டு வெல்லாவெளியில் டிப்பர் – முச்சக்கர வண்டி மோதி விபத்து; பெண் உயிரிழப்பு

September 17, 2026
Next Post
வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் யானைதாக்கி ஒருவர் உயிரிழப்பு

வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் யானைதாக்கி ஒருவர் உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு