Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நவீன சுகாதார சேவையை வலுப்படுத்த மூன்று முக்கிய துறைகளில் கவனம்; ஜனாதிபதி!

நவீன சுகாதார சேவையை வலுப்படுத்த மூன்று முக்கிய துறைகளில் கவனம்; ஜனாதிபதி!

47 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டின் அனைத்து மக்களுக்கும் ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதிப்படுத்தும் வகையில், சுகாதாரத் துறையை மூன்று முக்கியப் பிரிவுகளின் கீழ் வலுப்படுத்தி வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் நவீன இருதய சிகிச்சைத் தொகுதியின் நிர்மாணப் பணிகளை நேற்று (16) ஆரம்பித்து வைத்து உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

இலவச சுகாதார சேவையை மக்களுக்கு மேலும் நெருக்கமாக்குதல், நவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ முறைகளை அறிமுகப்படுத்துதல், முறையான முகாமைத்துவ கட்டமைப்பை உருவாக்குதல் ஆகிய மூன்று முக்கிய விடயங்களில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகாமைத்துவ நிறுவனத்தின் (JICA) கடன் உதவியின் கீழ் 3,545 மில்லியன் ரூபாய் செலவில், எட்டு மாடிகளைக் கொண்டதாக இந்த நவீன இருதய சிகிச்சைத் தொகுதி நிர்மாணிக்கப்படவுள்ளது.

இந்தத் தொகுதி நிறைவடைந்த பின்னர், பிரதேச மக்களுக்கு நவீன இருதய நோய் சிகிச்சை மற்றும் இருதய-மார்பு சத்திரசிகிச்சை வசதிகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படும்.

மேலும், இருதய தீவிர சிகிச்சைப் பிரிவுகள், ICU வசதிகள், கெதீட்டர் பரிசோதனைக் கூடங்கள், X-Ray, ECG வசதிகள், விசேட சிகிச்சைப் பிரிவுகள், வாட்டுத் தொகுதிகள், ஆய்வுக்கூடங்கள், கேட்போர் கூடம் மற்றும் நூலகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இந்தத் தொகுதியில் ஏற்படுத்தப்படவுள்ளன.

இத்திட்டத்தின் நிர்மாணப் பணிகளை 18 மாதங்களுக்குள் நிறைவு செய்து மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் மேலும் பல அபிவிருத்திப் பணிகளுக்காக 2027 மற்றும் 2028ஆம் ஆண்டுகளில் சுமார் 19,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான திட்டங்களை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது முன்னெடுக்கப்படும் திட்டங்களுடன் இணைந்து, அநுராதபுரம் வைத்தியசாலையின் அபிவிருத்திக்காக 34,000 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான முதலீடு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடியிலிருந்து தற்போது குறிப்பிடத்தக்க அளவில் ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மக்களின் வாழ்க்கைத் தரத்திலும் பிரதிபலிக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனக் கூறியுள்ளார்.

அதேபோன்று, கல்வித் துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளின் வளர்ச்சி முக்கியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆரோக்கியமான வாழ்க்கையே மக்களின் மிக முக்கியமான செல்வமாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இலவச சுகாதார சேவைகளை மக்களுக்கு மேலும் நெருக்கமாக்குவதற்காக “ஆரோக்கியா” வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய ரீதியில் மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப, இலங்கையிலும் நவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் மேம்பட்ட சிகிச்சை முறைகளை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இதனுடன், சுகாதாரத் துறையில் சிறந்த முகாமைத்துவ முறையொன்றை உருவாக்குவதும் அரசாங்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டு நகர் புறத்திலுள்ள பூச்சட்டிகளை சேதப்படுத்தும் நபர்கள்
காணொளிகள்

மட்டு நகர் புறத்திலுள்ள பூச்சட்டிகளை சேதப்படுத்தும் நபர்கள்

September 17, 2026
500 ரூபாய் இலஞ்சம் பெற்ற நீதிமன்ற அலுவலக ஊழியர் கைது!
செய்திகள்

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற நீதிமன்ற அலுவலக ஊழியர் கைது!

September 17, 2026
மட்டக்குளியில் இடம் பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டக்குளியில் இடம் பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு!

September 17, 2026
பொலிஸ் நற்சான்றிதழ் விண்ணப்ப சிக்கல்களுக்கு 24 மணி நேர தொலைபேசி சேவை!
செய்திகள்

பொலிஸ் நற்சான்றிதழ் விண்ணப்ப சிக்கல்களுக்கு 24 மணி நேர தொலைபேசி சேவை!

September 17, 2026
மட்டு வெல்லாவெளியில் டிப்பர் – முச்சக்கர வண்டி மோதி விபத்து; பெண் உயிரிழப்பு
செய்திகள்

மட்டு வெல்லாவெளியில் டிப்பர் – முச்சக்கர வண்டி மோதி விபத்து; பெண் உயிரிழப்பு

September 17, 2026
புகையிரத ஊழியர்களின் 48 மணி நேர பணிப்புறக்கணிப்பு ஆரம்பம்!
செய்திகள்

புகையிரத ஊழியர்களின் 48 மணி நேர பணிப்புறக்கணிப்பு ஆரம்பம்!

September 17, 2026
Next Post
500 ரூபாய் இலஞ்சம் பெற்ற நீதிமன்ற அலுவலக ஊழியர் கைது!

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற நீதிமன்ற அலுவலக ஊழியர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.