மட்டக்களப்பு கல்லடி பகுதியில், புனித அந்தோனியார் கிறிஸ்தவ தேவாலயத்திற்கு அருகாமையில், இன்று (03) காலை அடையாளம் காணப்படாத ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸ் தகவலின்படி, சடலமாக மீட்கப்பட்டவர் கிரான்குளம் பகுதியைச் சேர்ந்த ஐயாத்துரை பத்மநாதன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கூலி தொழிலாளியான இவர், வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை என அவரின் குடும்பத்தினர் முன்பே காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இந்நிலையில், இன்று காலை கல்லடி புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அருகாமையில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.
சடல மீட்பு குறித்து மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








