Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெளிநாட்டில் பணிக்குச் சென்ற 4,794 இலங்கையர் உயிரிழப்பு

வெளிநாட்டில் பணிக்குச் சென்ற 4,794 இலங்கையர் உயிரிழப்பு

11 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வெளிநாடுகளில் பணிக்குச் சென்ற 4794 இலங்கையர் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. இதில் 3179 ஆண்களும் 1615 பெண்களும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைச்சட்டத்துக்கு அமைவாக முன்வைக்கப்பட்ட தகவல் கோரிக்கைக்கு அமைய இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தால் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வெளியாகிய தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குச் சென்றவர்களில் அதிகமானோர் இயற்கை மரணம் எய்தியுள்ளனர். இவ்வாறு குறித்த காலப்பகுதியில் 3242 பேர் உயிரிழந்துள்ளனர்.

நீரில் மூழ்கி 428 பேரும், வீதி விபத்துக்களால் 446 பேரும் , 377 பேர் உயிரை மாய்த்தும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் 61 இலங்கையர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் அதிகமானோர் கொழும்பு, காலி, கம்பஹா, கண்டி, களுத்துறை, குருநாகல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களின் 3124 உடல்களை இலங்கைக்குக் கொண்டுவருவதற்காக 92.8 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், 224 உடல்களை அந்நாடுகளிலேயே நல்லடக்கம் செய்வதற்காகவும் போக்குவரத்துக்கும் 98.26 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை 2010 ஜனவரி முதல் 2024 டிசம்பர் வரையான காலப்பகுதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்குச் சென்று நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்த 72,718 பேர் அந்நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களுக்குச் சொந்தமான பாதுகாப்பு இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சவுதி அரேபியா, குவைத், ஜோர்தான், ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களின் பாதுகாப்பு இல்லங்களில் அதிகமானோர் தங்கவைக்கப்பட்டு, பின்னர் சொந்த நாடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

மேலும் 2024 ஆம் ஆண்டு நிறைவடையும் வரையில் 91 இலங்கையர்கள் தொடர்ந்தும் தூதரகங்களிலுள்ள பாதுகாப்பு இல்லங்களிலேயே தங்க வைக்கப்பட்டிருந்ததாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நீர்கொழும்பு சிறை மோதல்; உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கு ரூ.20 இலட்சத்திற்கும் மேல் நிவாரணம் வழங்க நடவடிக்கை!
செய்திகள்

நீர்கொழும்பு சிறை மோதல்; உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கு ரூ.20 இலட்சத்திற்கும் மேல் நிவாரணம் வழங்க நடவடிக்கை!

July 12, 2026
மீண்டும் மூடப்பட்ட ஹோர்முஸ் நீரிணை; புதிய தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா!
செய்திகள்

மீண்டும் மூடப்பட்ட ஹோர்முஸ் நீரிணை; புதிய தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா!

July 12, 2026
டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் 21 இலட்சம் ரூபாய் அபராதம்!
செய்திகள்

டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் 21 இலட்சம் ரூபாய் அபராதம்!

July 11, 2026
கதிர்காமத்தில் இன்று காட்டுக்குள் நுழைந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரம்
செய்திகள்

கதிர்காமத்தில் இன்று காட்டுக்குள் நுழைந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரம்

July 11, 2026
இந்திய இசை உலகின் குயில் எஸ். ஜானகி காலமானார்!
உலக செய்திகள்

இந்திய இசை உலகின் குயில் எஸ். ஜானகி காலமானார்!

July 11, 2026
யாழ் நகரில் யாசகர்களை அகற்ற விசேட நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!
செய்திகள்

யாழ் நகரில் யாசகர்களை அகற்ற விசேட நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!

July 11, 2026
Next Post
சம்பூரில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதியை தோண்ட நீதிமன்றம் உத்தரவு

சம்பூரில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதியை தோண்ட நீதிமன்றம் உத்தரவு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு