Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழ் நகரில் யாசகர்களை அகற்ற விசேட நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!

யாழ் நகரில் யாசகர்களை அகற்ற விசேட நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!

59 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாண நகரப் பகுதியில் சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் 30-க்கும் மேற்பட்ட யாசகர்கள் மற்றும் வீதிவியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சிலர் மீது விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுற்றுலாத்துறை தலைவர் விவேகானந்தராஜா தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை நேற்று (10) யாழ்ப்பாண பொலிஸாரின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் கோட்டைச் சுற்றுவட்டாரம், மத்திய பேருந்து நிலையம், கஸ்தூரியார் வீதி, மின்சார நிலைய வீதி மற்றும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை சுற்றுவட்டாரம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு இடையூறாக யாசகம் மேற்கொள்ளப்படுவதாக பல்வேறு தரப்பினரிடமிருந்து தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைத்ததாக கூறினார்.

இதனையடுத்து, யாழ்ப்பாண பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு விடயம் கொண்டு செல்லப்பட்டதுடன், யாழ்ப்பாண மாநகர சபையின் ஒத்துழைப்புடனும் இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

நடவடிக்கையின் போது, வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட யாசகர்கள் மற்றும் சில வீதிவியாபாரிகள் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களது விபரங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சில சிறுவர்கள் யாசகம் பெறும் நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டதாகவும், அவர்களுடன் இருந்த பாதுகாவலர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, இனி இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டோம் என்ற உறுதிமொழியின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டதாகவும் வட மாகாண சுற்றுலாத்துறை தலைவர் விவேகானந்தராஜா தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

2029ஆம் ஆண்டு நாமல் ராஜபக்ச தலைமையில் புதிய அரசை அமைப்போம்; ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டத்தில் வலியுறுத்தல்!
செய்திகள்

2029ஆம் ஆண்டு நாமல் ராஜபக்ச தலைமையில் புதிய அரசை அமைப்போம்; ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டத்தில் வலியுறுத்தல்!

July 11, 2026
மட்டக்களப்பில் மூன்று அரச திணைக்களங்களில் முறைகேடுகள் இடம்பெறுவதாக ஈ.பி.டி.பி. குற்றச்சாட்டு!
செய்திகள்

மட்டக்களப்பில் மூன்று அரச திணைக்களங்களில் முறைகேடுகள் இடம்பெறுவதாக ஈ.பி.டி.பி. குற்றச்சாட்டு!

July 11, 2026
வெளிநாட்டு இலங்கை தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகம் செய்ய அரசு திட்டம்!
செய்திகள்

வெளிநாட்டு இலங்கை தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகம் செய்ய அரசு திட்டம்!

July 11, 2026
கிழக்கின் அபிவிருத்தி மற்றும் சுற்றுலா வாய்ப்புகள் குறித்து ஆசிய நாடுகளின் தூதுவர்கள் மட்டக்களப்பில் கலந்துரையாடல்!
செய்திகள்

கிழக்கின் அபிவிருத்தி மற்றும் சுற்றுலா வாய்ப்புகள் குறித்து ஆசிய நாடுகளின் தூதுவர்கள் மட்டக்களப்பில் கலந்துரையாடல்!

July 11, 2026
அலி கமெனியின் இறுதிச் சடங்கில் 4.3 கோடி பேர் பங்கேற்றதாக ஈரான் ஊடகங்கள் தகவல்!
உலக செய்திகள்

அலி கமெனியின் இறுதிச் சடங்கில் 4.3 கோடி பேர் பங்கேற்றதாக ஈரான் ஊடகங்கள் தகவல்!

July 11, 2026
‘எல் நினோ’ வலுப்பெற வாய்ப்பு; நீர் முகாமைத்துவத்தில் அவதானம் செலுத்துமாறு அறிவுறுத்தல்!
செய்திகள்

‘எல் நினோ’ வலுப்பெற வாய்ப்பு; நீர் முகாமைத்துவத்தில் அவதானம் செலுத்துமாறு அறிவுறுத்தல்!

July 11, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு