Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நீர்கொழும்பு சிறை மோதல்; உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கு ரூ.20 இலட்சத்திற்கும் மேல் நிவாரணம் வழங்க நடவடிக்கை!

நீர்கொழும்பு சிறை மோதல்; உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கு ரூ.20 இலட்சத்திற்கும் மேல் நிவாரணம் வழங்க நடவடிக்கை!

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட ரூ.5 இலட்சம் ஆரம்பகட்ட நிவாரணமாக மட்டுமே வழங்கப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தத் தொகை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு பதிலளித்த சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க, உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கு ரூ.20 இலட்சத்திற்கும் அதிகமான நிவாரணத் தொகையை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.

மேலும், உயிரிழந்த அதிகாரிகளின் இறுதிக்கிரியைகள் அனைத்தும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் முழுச் செலவில் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, மோதலில் காயமடைந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உரிய நட்டஈடு வழங்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த ஏழு சிறைச்சாலை அதிகாரிகள் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் மூவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

2019ஆம் ஆண்டு ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியது ஏன்?; முடிவின் பின்னணியை வெளிப்படுத்திய ரணில்!
செய்திகள்

2019ஆம் ஆண்டு ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியது ஏன்?; முடிவின் பின்னணியை வெளிப்படுத்திய ரணில்!

October 10, 2026
எனது காவி உடை களையப்பட்டபோது யாரும் வரவில்லை; இப்போது குடிகார பிக்குவுக்காக நாடே திரள்கிறது!; ராஜங்கனை சுத்தாநந்த தேரர் கடும் சாடல்
செய்திகள்

எனது காவி உடை களையப்பட்டபோது யாரும் வரவில்லை; இப்போது குடிகார பிக்குவுக்காக நாடே திரள்கிறது!; ராஜங்கனை சுத்தாநந்த தேரர் கடும் சாடல்

October 10, 2026
அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குங்கள்; அனிரன் கோரிக்கை
செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குங்கள்; அனிரன் கோரிக்கை

October 10, 2026
மெட்ரோ பஸ்ஸை திட்டமிட்டு மோதச் செய்து விபத்து; தனியார் சொகுசு பஸ் சாரதி கைது!
செய்திகள்

மெட்ரோ பஸ்ஸை திட்டமிட்டு மோதச் செய்து விபத்து; தனியார் சொகுசு பஸ் சாரதி கைது!

October 10, 2026
சிறைச்சாலை விதிமுறைகளைப் புதுப்பிக்க விசேட குழு நியமனம்!
செய்திகள்

சிறைச்சாலை விதிமுறைகளைப் புதுப்பிக்க விசேட குழு நியமனம்!

October 10, 2026
அதிக புகை வெளியேற்றும் வாகனங்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை!
செய்திகள்

அதிக புகை வெளியேற்றும் வாகனங்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை!

October 10, 2026
Next Post
போலி ரூ.50,000 நாணயத் தாள்கள் வைத்திருந்தவருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை!

போலி ரூ.50,000 நாணயத் தாள்கள் வைத்திருந்தவருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு