Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர தீர்மானம்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர தீர்மானம்

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தின் சாட்சியாளராக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் எவ்வாறு சிறந்த முறையில் இடம்பெறும். அரசாங்கத்தின் விசாரணைகளை அரசாங்கம் மீள்பரீசீலனை செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி குறிப்பிடுகின்ற நிலையில்,அருண ஜயசேகரவை பதவி நீக்குவது பொருத்தமானதாக அமையும் என குறிப்பிட்டு எதிர்க்கட்சிகள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்க எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர தீர்மானித்துள்ளது.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக கைச்சாத்திடப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் திங்கட்கிழமை சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்தனவிடம் கையளிக்கப்படவுள்ளது.

குற்றங்கள் தொடர்பில் பாரபட்சமின்றிய வகையில் விசாரணைகள் எடுக்கப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிடுவது உண்மையாயின் அருண ஜயசேகரவை பதவி நீக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் கூட்டாக வலியுறுத்தினர்.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து தெளிவுப்படுத்தும் ஊடகவியாளர் சந்திப்பு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் வியாழக்கிழமை (07) நடைபெற்றது.

இந்த ஊடகசந்திப்பில் கலந்துக் கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்,

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்வதாக குறிப்பிட்டே தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தது,முறையான விசாரணைகள் இடம்பெறுவதாகவும், ஏப்ரல் 21 ஆம் திகதியன்று பிரதான சூத்திரதாரியை வெளிப்படுத்துவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.ஆனால் இதுவரையில் உண்மை வெளிப்படுத்தப்படவில்லை.

குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றபோது கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியாக பதவி வகித்த அருண ஜயசேகர பாதுகாப்பு பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.இவரை பதவி வைத்துக் கொண்டு எவ்வாறு முறையான விசாரணைகளை மேற்கொள்ள முடியும்.

அரசாங்கத்தின் விசாரணையை அரசாங்கம் விசாரணை செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி குறிப்பிடுகிறார். அவ்வாறாயின் பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவை பதவி நீக்கி விட்டு முறையான விசாரணைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். இதற்கமைவாகவே பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்துள்ளோம் என்றார்.

இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவிக்க ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன, குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் அரசாங்கத்தின் வாக்குறுதிகள் அனைத்தும் போலியாகியுள்ளன

தேசிய பாதுகாப்பு தொடர்பில் கற்பிப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு பதவிக்கு வந்த அரசாங்கம் தேசிய பாதுகாப்பை மலினப்படுத்தியுள்ளது. பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக நல்ல நோக்கத்துக்காகவே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படவுள்ளது என்றார்.

இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர குற்றவாளி என்று எவரும் குறிப்பிடவில்லை.இருப்பினும் குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய சம்பவத்தில் அவர் சாட்சியாளராக பெயரிடப்பட்டுள்ளார். இவ்வாறான நிலையில் அவரை பதவியில் வைத்துக் கொண்டு முறையான விசாரணைகள் சுயாதீனமான முறையில் மேற்கொள்ளப்படும் என்பதை எவ்வாறு நம்ப முடியும் என்

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalsrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு
அரசியல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு

September 15, 2026
பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்
செய்திகள்

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

September 15, 2026
மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்
செய்திகள்

மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்

September 15, 2026
அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!
செய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!

September 15, 2026
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!

September 15, 2026
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
Next Post
மன்னார் காற்றாலை மின்னுற்பத்தித் திட்டம் இடைநிறுத்தம்

மன்னார் காற்றாலை மின்னுற்பத்தித் திட்டம் இடைநிறுத்தம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.