ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக சமூக ஊடகங்களில் பரவிய அவதூறு பிரச்சாரத்தைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் துறை (CID) விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளது.
பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் உத்தரவின் பேரில், இந்த பிரச்சாரத்தில் தொடர்புடையதாக அடையாளம் காணப்பட்ட ஒரு இணையதளம் மற்றும் யூடியூப் அலைவரிசை குறித்தும் சிறப்பு சிஐடி குழு நியமிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் வட்டாரங்களின் தகவலின்படி, இந்த அவதூறு பிரச்சாரத்தில் அமைச்சர்கள் மற்றும் அரச ஆதரவாளர்களின் பெயர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட தரப்பினர் சிஐடிக்கு முறைப்பாடு அளித்துள்ளனர்.
இந்த பிரச்சாரம், ஜனாதிபதி மற்றும் பல அமைச்சரவை அமைச்சர்களின் நற்பெயருக்கு சேதம் விளைவித்ததாக கூறப்படுகிறது.








