கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (11) அதிகாலை, சுமார் ரூ. 6 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வர முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கண்டி மாவட்டத்தின் கன்னேபானவில் பகுதியைச் சேர்ந்த 24 வயதான இந்த நபர், துபாயில் வீட்டு வேலை செய்துள்ளார். திங்கட்கிழமை அதிகாலை ஓமானின் மஸ்கட்டிலிருந்து விமான நிலையம் வந்தபோது, சுங்க அதிகாரிகள் அவரது பயணப்பையை சோதனை செய்தனர்.
அதில் “பிளாட்டினம்” மற்றும் “மான்செஸ்டர்” வகையைச் சேர்ந்த மொத்தம் 40,000 சிகரெட்டுகள் அடங்கிய 200 அட்டைப்பெட்டிகள் கைப்பற்றப்பட்டன.
சந்தேக நபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.








