Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சாவகச்சேரியில் 284 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

சாவகச்சேரியில் 284 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

12 months ago
in செய்திகள்

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அறுகுவெளி பகுதியில் நேற்று (11) மாலை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 7 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள 284 கிலோ 415 கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ் மாவட்டத்தில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் வழிகாட்டலில், யாழ் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயமகாவின் ஆலோசனை மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சானக டீசில்வாவின் கண்காணிப்பில், சாவகச்சேரி பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி பாலித்த செனவிரத்ன தலைமையிலான போதைப்பொருள் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவு இந்த விஷேட தேடுதலை மேற்கொண்டது.

அறுகுவெளி பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய இருவரிடம் நடத்தப்பட்ட சோதனையில், அவர்களது உடைமையில் கேரள கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. மேலதிக விசாரணையில், அறுகுவெளி பகுதியில் பற்றைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 284 கிலோ 415 கிராம் கஞ்சா மீட்கப்பட்டது.

கைதுசெய்யப்பட்ட இருவரும் குருநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்களில் ஒருவர் யாழ் மாவட்டத்தில் பிரபல போதைப்பொருள் வர்த்தகராகவும், அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகளில் ஈடுபடுவதாக போலியாக அடையாளப்படுத்தி வந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் மீதான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன, மேலும் அவர்கள் சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து தொற்று நோய்கள் பரவும் அபாயம்; பொதுச் சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கை!
செய்திகள்

வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து தொற்று நோய்கள் பரவும் அபாயம்; பொதுச் சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கை!

August 6, 2026
மலைப்பாம்புடன் நடனமாடிய இளம்பெண்ணுக்கு ரூ.50,000 அபராதம்!
செய்திகள்

மலைப்பாம்புடன் நடனமாடிய இளம்பெண்ணுக்கு ரூ.50,000 அபராதம்!

August 6, 2026
வளி மாசடைவால் இலங்கையில் ஆண்டுதோறும் 7,000 திடீர் மரணங்கள்!
செய்திகள்

வளி மாசடைவால் இலங்கையில் ஆண்டுதோறும் 7,000 திடீர் மரணங்கள்!

August 6, 2026
செம்மணி மனித புதைகுழி; மேலும் 8 என்புக் கூடுகள் கண்டுபிடிப்பு!
செய்திகள்

செம்மணி மனித புதைகுழி; மேலும் 8 என்புக் கூடுகள் கண்டுபிடிப்பு!

August 6, 2026
ஈட்டி எறிதலுக்கான உலக தரவரிசையில் ரூமேஷ் தரங்க முதலிடத்தில்!
செய்திகள்

ஈட்டி எறிதலுக்கான உலக தரவரிசையில் ரூமேஷ் தரங்க முதலிடத்தில்!

August 6, 2026
தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்ட நிறுவனங்களின் புதிய பட்டியலை வெளியிட்டது மத்திய வங்கி!
செய்திகள்

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்ட நிறுவனங்களின் புதிய பட்டியலை வெளியிட்டது மத்திய வங்கி!

August 6, 2026
Next Post
மட்டக்களப்பில் 100 நாள் செயல்முனைவு; 12ஆம் நாள் வெற்றிகரமாக நிறைவு

மட்டக்களப்பில் 100 நாள் செயல்முனைவு; 12ஆம் நாள் வெற்றிகரமாக நிறைவு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு