Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வளி மாசடைவால் இலங்கையில் ஆண்டுதோறும் 7,000 திடீர் மரணங்கள்!

வளி மாசடைவால் இலங்கையில் ஆண்டுதோறும் 7,000 திடீர் மரணங்கள்!

2 months ago
in செய்திகள்

இலங்கையில் வளி மாசடைவால் ஆண்டுதோறும் சுமார் 7,000 திடீர் மரணங்கள் பதிவாகி வருவதாக சுகாதார அமைச்சின் சுற்றாடல் மற்றும் தொழில்சார் சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் சாந்தனி விதான தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், உலகளவில் ஆண்டுதோறும் 7 முதல் 8 மில்லியன் பேர் வரை வளி மாசடைவின் தாக்கத்தால் உயிரிழப்பதாகவும், அந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் கூறினார்.

இலங்கையிலும் காற்றில் காணப்படும் தீங்கு விளைவிக்கும் நுண்துகள்களே ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளுக்குக் காரணமாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

வளி மாசடைவு காரணமாக ஆஸ்துமா, மூச்சுத்திணறல், நீடித்த நுரையீரல் நோய்கள் மட்டுமன்றி, மாரடைப்பு, இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் போன்ற கடுமையான உடல்நலப் பாதிப்புகளும் ஏற்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், வீட்டுக்குள் விறகை எரித்து சமைக்கும் போது வெளியேறும் புகையால் உட்புற வளி மாசடைவு வெளிப்புறத்தை விட சுமார் ஐந்து மடங்கு அதிகமாக இருப்பதாக குறிப்பிட்ட அவர், இதன் விளைவாக பெண்களிடையே நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், மூடிய இடங்களில் மண்ணெண்ணெய் அடுப்பைப் பயன்படுத்தி சமைப்பதைத் தவிர்க்குமாறும், சுகாதாரத்திற்கு பாதுகாப்பான சமையல் முறைகளைப் பின்பற்றுமாறும் பொதுமக்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
செய்திகள்

பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

September 20, 2026
அனோஜனை விடுதலை செய்யக் கோரி கல்முனையில் கவனயீர்ப்பு போராட்டம்!
செய்திகள்

அனோஜனை விடுதலை செய்யக் கோரி கல்முனையில் கவனயீர்ப்பு போராட்டம்!

September 20, 2026
நாவலப்பிட்டியில் மகாவலி கங்கை பெருக்கெடுப்பு; 100 குடும்பங்கள் இடம்பெயர்வு!
செய்திகள்

நாவலப்பிட்டியில் மகாவலி கங்கை பெருக்கெடுப்பு; 100 குடும்பங்கள் இடம்பெயர்வு!

September 20, 2026
அனோஜனுக்கு மன்னிப்புப் பெற்றுக்கொடுக்க இராஜதந்திர மட்டத்தில் உச்சபட்ச நடவடிக்கை; விஜித ஹேரத்!
செய்திகள்

அனோஜனுக்கு மன்னிப்புப் பெற்றுக்கொடுக்க இராஜதந்திர மட்டத்தில் உச்சபட்ச நடவடிக்கை; விஜித ஹேரத்!

September 20, 2026
தரமற்ற குழந்தை டயப்பர்கள் விற்பனை; நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரிக்கை!
செய்திகள்

தரமற்ற குழந்தை டயப்பர்கள் விற்பனை; நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரிக்கை!

September 20, 2026
இலங்கையில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகரிப்பு; மட்டக்களப்பில் குறைந்த பாலின விகிதம்!
செய்திகள்

இலங்கையில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகரிப்பு; மட்டக்களப்பில் குறைந்த பாலின விகிதம்!

September 20, 2026
Next Post
மலைப்பாம்புடன் நடனமாடிய இளம்பெண்ணுக்கு ரூ.50,000 அபராதம்!

மலைப்பாம்புடன் நடனமாடிய இளம்பெண்ணுக்கு ரூ.50,000 அபராதம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு