மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பகுதியில் சிவானந்தா தேசிய பாடசாலை ஆசிரியை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தாயான சுதாகரன் விஜிதகுமாரி என்பவரே நேற்று (21) இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் கணவர் சிறிது நாட்களுக்கு முன்னர் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியிருந்த நிலையில் அவர்களது குடும்பத்துக்குள் ஏற்பட்ட முறுகளே தற்கொலைக்கு காரணம் என பொலிஸார் தகவல் தெரிவித்தனர்.