Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முத்தையன்கட்டு குடும்பஸ்தர் மரணம்; கைதுசெய்யப்பட்ட நபரை அன்றிரவே பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்தாக இராணுவ பேச்சாளர் தெரிவிப்பு

முத்தையன்கட்டு குடும்பஸ்தர் மரணம்; கைதுசெய்யப்பட்ட நபரை அன்றிரவே பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்தாக இராணுவ பேச்சாளர் தெரிவிப்பு

12 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

முத்தையன்கட்டு குளத்தில் கபில்ராஜ் என்ற இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளமைக்கும் இராணுவத்திற்கும் தொடர்புள்ளதாக தெரிவிக்கப்படுவதை இராணுவ பேச்சாளர் வருணகமகே நிராகரித்துள்ளார்.

ஐலண்ட் நாளிதழிற்கு இதனை அவர் தெரிவித்துள்ளார்.

ஒட்டிசுட்டான் முத்தையன்கட்டு வீதியில் உள்ள முகாமில் உள்ள படையினர் ஆகஸ்ட் ஏழாம் திகதி இரவு நபர்கள் சிலர் முகாமிற்குள் நுழைய முற்பட்டதை தடுத்து நிறுத்தினார்கள் என இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

படையினர் அவர்களில் ஒருவரை கைதுசெய்தனர் ஏனையவர்கள் தப்பியோடிவிட்டனர் நாங்கள் அவர்களை துரத்திச்செல்லவில்லை என இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இராணுவதலைமையகத்தின் உத்தரவின் பேரில் குறிப்பிட்ட இராணுவ முகாமை சேர்ந்தவர்கள் பொலிஸாருக்கு உரிய ஒத்துழைப்பை வழங்கினார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

மூன்று படையினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர், எவரும் கபில்ராஜின் உடல் மீட்கப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

சிங்கரெஜிமன்டின் 12வது பட்டாலியனின் முகாம் அது 2025 ஆகஸ்ட் ஏழாம் திகதி இரவு கைதுசெய்யப்பட்டவரை பின்னர் அவரது பெற்றோர்களிடம் ஒப்படைத்துவிட்டோம்,என தெரிவித்துள்ள இராணுவ பேச்சாளர் பல உள்நோக்கம் கொண்ட சக்திகள் இந்த விடயத்தை பயன்படுத்த முயல்கின்றன,ஆனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அந்த முகாமை சேர்ந்தவர்களுடன் சிறந்த உறவை பேணுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத்தினரால் கைவிடப்பட்ட பொருட்களை எடுத்துச்செல்வதற்காக சிலரை அழைத்த பின்னர் இராணுவத்தினர் அவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டார்கள் என தெரிவிக்கப்படுவதை மறுத்துள்ள இராணுவ பேச்சாளர் இது முற்றிலும் பொய் என தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்
செய்திகள்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்

August 4, 2026
இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்
செய்திகள்

இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்

August 4, 2026
கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது
செய்திகள்

கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது

August 4, 2026
ஈரான் இரட்டை வேடம் போடுகிறது; பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் கடும் குற்றச்சாட்டு
செய்திகள்

ஈரான் இரட்டை வேடம் போடுகிறது; பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் கடும் குற்றச்சாட்டு

August 4, 2026
தொல்லியல் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களின் நில உரிமைகள் சிதைக்க முயற்சி
செய்திகள்

தொல்லியல் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களின் நில உரிமைகள் சிதைக்க முயற்சி

August 4, 2026
மேலும் 50 சொகுசு தாழ் மிதிபலகை பேருந்துகள் கொள்வனவு செய்ய நடவடிக்கை!
செய்திகள்

மேலும் 50 சொகுசு தாழ் மிதிபலகை பேருந்துகள் கொள்வனவு செய்ய நடவடிக்கை!

August 4, 2026
Next Post
திருகோணமலை விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பிற்க்காக துப்பாக்கிகள் வழங்கி வைப்பு

திருகோணமலை விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பிற்க்காக துப்பாக்கிகள் வழங்கி வைப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு