மன்னாரில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட காற்றாலை அபிவிருத்தி திட்டம் ஒரு மாதத்திற்கு தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மக்களின் எதிர்ப்பினால், திட்டத்தின் சாதக-பாதகங்களை ஆய்வு செய்யும் அறிக்கை தயாரிக்கவும், அந்த காலத்தில் மக்களின் கருத்துக்களை கேட்டு அறிதல் மேற்கொள்ளவும் ஜனாதிபதியுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
காற்றாலை அமைத்தல் மற்றும் கனிம மண் அகழ்வை நிறுத்த வேண்டும் என கோரி, மன்னார் மக்கள் சுழற்சி முறையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுமாறு அரசாங்க அதிபர் கோரியதைத் தொடர்ந்து, மன்னார் மக்களின் ஐந்து பிரதிநிதிகள் 13ஆம் தேதி ஜனாதிபதியை சந்தித்து விவாதித்தனர்.

போராட்டம் தொடருமா அல்லது நிறுத்தப்படுமா என்பது, மக்களுடன் ஆலோசித்த பிறகு முடிவு செய்யப்படும் என மன்னார் பிரஜைகள் குழுத் தலைவர் அருட்தந்தை மார்க்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.








