Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இன்றைய ஹர்த்தால் தொடர்பில் ஊடக கணிப்பு

இன்றைய ஹர்த்தால் தொடர்பில் ஊடக கணிப்பு

12 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தமிழ்த் தேசியத்தை எப்போதுமே ‘காத்து’ சுமப்பதில் கிழக்கு மாகாண மக்களுக்கு ஈடாக யாரும் இல்லை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியிருக்கிறது. இராணுவ அத்துமீறல்கள், ஆக்கிரமிப்புக்கள், படுகொலைகளைக் கண்டித்து தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்த கடையடைப்புப் போராட்டத்தின் முதன்மைப் பங்காளிகளாக நின்று மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்ட மக்கள் இன்றும் பங்களித்திருக்கிறார்கள். அவர்கள் வழியில், முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி மக்களும் இணைத்திருக்கிறார்கள்.

கடந்த பொதுத் தேர்தலில் தென் இலங்கைச் சக்திகளிடம் சரணடைந்தது போல, யாழ்ப்பாணத்தில் மாத்திரம் சில இடங்களில், சில தரப்பினரின் தலையீடுகளுடன் கடையடைப்புப் போராட்டம் சோபையிழந்திருக்கின்றது. ‘சுமந்திரனின் கடையடைப்பு’ என்று போராட்டத்தின் நோக்கத்தினைச் சுருக்கி, போராட்டத்தினைச் தோல்வியடைய வைக்க முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளை, தமிழ்த் தேசத்தின் பெரும்பான்மையான மக்கள் தோற்கடித்திருக்கிறார்கள்.

தமிழ்த் தேசியம் என்பது கட்சிகள் – நபர்களுக்கானது அல்ல. அது எமது தேசத்திற்கானது, எமது இருப்பிற்கானது என்கிற அடிப்படைகளோடு எப்போதுமே தமிழ் மக்கள் இருக்கிறார்கள். அவர்கள், கட்சி, தனிநபர் ஆதரவு – எதிர்ப்பு மனநிலைகளைக் கடந்து நின்று, இன்றைய கடையடைப்புப் போராட்டத்திலும் இணைந்திருக்கிறார்கள்.

யாழ்ப்பாணத்துக்குள் தமிழ்த் தேசிய அரசியலை சுருக்கிக் கொண்டு, தங்களை ஆதிக்க சக்திகளாக நிறுவ முயன்ற சக்திகளுக்கு மீண்டும் தமிழ் மக்கள் முகத்தில் கரியைப் பூசியிருக்கிறார்கள். தமிழ்த் தேசியம் என்பது யாழ். மையவாதம் இல்லை என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.

அடிப்படை நோக்கங்களற்ற பொது வேட்பாளர் ஆதரவு நிலை, தேசிய மக்கள் சக்தியின் எழுச்சி என்று யாழ்ப்பாண மையவாதம் தமிழ்த் தேசத்தின் நோக்கங்களுக்கு எதிர்திசையில் ஓடிய வரலாற்றினை அண்மைய நாட்களில் பதிவு செய்திருக்கின்றது. அதன் அடுத்த கட்டத்தை பதிவு செய்வதற்காக முயன்றவர்கள் முகங்களில் தமிழர் தேசம் ஓங்கி அறைந்திருக்கின்றது.

இனி, போராட்ட அறிவிப்புக்கள் படப்போகும் பாட்டை நினைத்தால்தான், பரிதாபமாக இருக்கிறது. அதுவும், போராட்டங்களை கட்சி நிலைப்பாடுகளுடன் அணுகியவர்கள் எதிர்கொள்ளப் போகும் சிக்கல்கள் ரணகளமாக இருக்கும்.

“கடையடைப்புப் போராட்டம் இல்லை” என்று கூவிக் கொண்ட அர்ச்சுனாவும், அவரது அணியினரும், அவர்களின் சகபாடிகளும், சுமந்திரன் எதிர்த்தரப்பினரும் மகிழ்ந்திருப்பதற்கான நாளாக இன்று இல்லை. அவர்களின் மனவுளைச்சல்களுக்காக வருந்துகிறேன். நோக்கங்களை மறந்து, நபர்கள் மீது போராட்ட நோக்கங்களைச் சுருக்கினால், இவ்வாறான சிக்கல்களை எதிர்கொள்வது இயல்பானது.

இனியாவது, தனிநபர் எதிர்ப்பை, தமிழ்த் தேசிய நோக்கங்களை சிதைப்பதற்காக கையாளாதீர்கள் அன்பர்களே! ஏனெனில், இன்று நீங்களும் தேசிய மக்கள் சக்தியினரும், ஊசிக் கூட்டமும் ஒரே இடத்தில் நிற்கிறீர்கள்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

யாழ்ப்பாணம், கண்டி வரை விரியும் மெட்ரோ பேருந்து சேவை; ஆண்டிறுதிக்குள் 121 புதிய பேருந்துகள் இயக்கம்!
செய்திகள்

யாழ்ப்பாணம், கண்டி வரை விரியும் மெட்ரோ பேருந்து சேவை; ஆண்டிறுதிக்குள் 121 புதிய பேருந்துகள் இயக்கம்!

July 31, 2026
ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் பூஜிதவுக்கு மரணதண்டனை!
செய்திகள்

ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் பூஜிதவுக்கு மரணதண்டனை!

July 31, 2026
சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட பல மில்லியன் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!
செய்திகள்

சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட பல மில்லியன் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

July 31, 2026
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம்; ஹேமசிறிக்கும் மரணதண்டனை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம்; ஹேமசிறிக்கும் மரணதண்டனை!

July 31, 2026
நீதிபதிகளின் ஓய்வுவயது திருத்தத்தை உடனே வாபஸ் பெறுங்கள்; அரசாங்கத்துக்கு அங்கிலிக்கன் திருச்சபை வலியுறுத்தல்!
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுவயது திருத்தத்தை உடனே வாபஸ் பெறுங்கள்; அரசாங்கத்துக்கு அங்கிலிக்கன் திருச்சபை வலியுறுத்தல்!

July 31, 2026
கட்டுநாயக்க ஆடைத் தொழிற்சாலை பேருந்தில் இளம் சாரதி எடுத்த விபரீத முடிவு
செய்திகள்

கட்டுநாயக்க ஆடைத் தொழிற்சாலை பேருந்தில் இளம் சாரதி எடுத்த விபரீத முடிவு

July 31, 2026
Next Post
வீரமுனை மின்னொளி கிரிக்கெட்டில் மார்க்ஸ்மேன் அணி வெற்றி கிண்ணம்

வீரமுனை மின்னொளி கிரிக்கெட்டில் மார்க்ஸ்மேன் அணி வெற்றி கிண்ணம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.