Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வீரமுனை மின்னொளி கிரிக்கெட்டில் மார்க்ஸ்மேன் அணி வெற்றி கிண்ணம்

வீரமுனை மின்னொளி கிரிக்கெட்டில் மார்க்ஸ்மேன் அணி வெற்றி கிண்ணம்

10 months ago
in செய்திகள், விளையாட்டு

வீரமுனை மின்னொளி போட்டியில் மார்க்ஸ்மேன் அணியினர் சம்பியன் கிண்ணத்தை வெற்றிகொண்டனர்.

வீரமுனை பீனிக்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்திய அணிக்கு பதினொருபேர், பத்து ஓவர்கள் மட்டுப்படுத்திய மின்னொளி மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நேற்று (17) வீரமுனைபொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. 

இறுதிப் போட்டியில் அட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன் அணியினர்  சம்பியன் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டனர். 

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மார்க்ஸ்மேன் அணியினர் துடுப்பாட்டத்தை தெரிவுசெய்தனர். முதலில் துடுப்பெடுத்தாடிய மார்க்ஸ்மேன் விளையாட்டுக் கழகத்தினர் பத்து (10) ஓவர்களில் நிறைவில் ஆறு விக்கட்டுக்களை இழந்து 67ஓட்டங்களை பெற்றனர். 

எதிர்த்தாடிய கல்முனை பெஸ்ட் இலவென் அணியினர் 10ஓவர்கள் நிறைவில் ஒன்பது (09) விக்கட்டுக்களை இழந்து 25ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவிக்கொண்டனர்.  

குறித்த போட்டியில் ஆட்டநாயகன் விருதினை எம்.ஐ.எம்.இர்ஸாத், சிறந்த பந்துவிச்சாளருக்கான விருதினை என். நபாத் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இச்சுற்றுப்போட்டியில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட மார்க்ஸ்மேன் அணியினருக்கு 50ஆயிரம் ரூபா பணப்பரிசும், வெற்றிக் கிண்ணமும் வழங்கிவைக்கப்பட்டது.  

இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்ட பெஸ்ட் இலவன் அணியினருக்கு  30ஆயிரம் ரூபா பணமும் வெற்றிக்கிண்ணமும் வழங்கிவைக்கப்பட்டது.  

மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்ட Trible G அணியினருக்கு 10ஆயிரம் ரூபா பணமும் வெற்றிக்கிண்ணமும் வழங்கப்பட்டது,

நான்காம் இடத்தை பெற்றுக்கொண்ட யுனிட்டி அணியினருக்கு 5000ஆயிரம் பணம் வழங்கப்பட்டது
குறித்த சுற்றுப்போட்டி நிகழ்வுக்கான அனுசரனையினை பீனிக்ஸ் விளையாட்டுக்கழகத்தின் நிறுவாகத்தினர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கும் சட்டம்
செய்திகள்

பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கும் சட்டம்

June 7, 2026
யாழ் விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைக்க தடையாக இருக்கும் அமைச்சர் சந்திரசேகர்
செய்திகள்

யாழ் விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைக்க தடையாக இருக்கும் அமைச்சர் சந்திரசேகர்

June 7, 2026
வீட்டு தகராறில் மனைவியின் தாக்குதலில் கணவன் பலி
செய்திகள்

வீட்டு தகராறில் மனைவியின் தாக்குதலில் கணவன் பலி

June 7, 2026
மட்டக்களப்பின் அபிவிருத்தி தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கையினை மத்திய வங்கியின் ஆளுநரிடம் கையளித்த மட்டக்களப்பு வர்த்தக சம்மேளன பிரதிநிதிகள்
செய்திகள்

மட்டக்களப்பின் அபிவிருத்தி தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கையினை மத்திய வங்கியின் ஆளுநரிடம் கையளித்த மட்டக்களப்பு வர்த்தக சம்மேளன பிரதிநிதிகள்

June 7, 2026
கல்முனையில் கொடூரம்; 16 வயது சிறுமி காதலனால் கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வு
செய்திகள்

கல்முனையில் கொடூரம்; 16 வயது சிறுமி காதலனால் கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வு

June 7, 2026
பொதுமக்கள் தினத்தில் கூட்டங்களில் கலந்துகொள்ள முடியாது; பிரதேச செயலாளர்கள் சங்கம்
செய்திகள்

பொதுமக்கள் தினத்தில் கூட்டங்களில் கலந்துகொள்ள முடியாது; பிரதேச செயலாளர்கள் சங்கம்

June 7, 2026
Next Post
காத்தான்குடியில் கடலில் மிதந்து வந்த நிலையில் சடலம் மீட்பு

காத்தான்குடியில் கடலில் மிதந்து வந்த நிலையில் சடலம் மீட்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு