காத்தான்குடி கடற்கரைப்பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மிதந்து வந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆர்.எம்.ஐ. ரத்னாயக்க தெரிவித்தார்.
மீட்கப்பட்டவர் ஆரையம்பதி இராசதுரை கிராமத்தைச் சேர்ந்த 72 வயதுடைய கதிர்காமத் தம்பி சுந்தரலிங்கம் என்பவர் என அடையாளம் காணப்பட்டார்.
சில தினங்களாக அதிகளவில் வடிசாராயம் அருந்தி வந்திருந்ததாகவும், இன்று காலை வீட்டை விட்டு வெளியேறிச் சென்ற பின்னர் சடலமாக மீண்டெடுக்கப்பட்டதாகவும் அவரது மனைவி தெரிவித்தார்.
சடலம் அடையாளம் காணப்பட்டதையடுத்து பிரேதப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.











